"ஜாதிய அவமதிப்பு.." அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை.. 15 நாட்கள் கெடு விதித்த ஆணையம்!
சென்னை: அரசு அதிகாரியை ஜாதிய ரீதியில் அவமதித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் கணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். பட்டியலின பிரிவைச் சேர்ந்த இவரை, போக்குவரத்துதுறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் இருந்தபோது, சாதிய ரீதியாக அவமானம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ராஜேந்திரனை சந்திக்க அழைத்தபோது அமைச்சர் ராஜ கண்ணப்பன், பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வைத்துள்ளேன். இல்லையென்றால், உடனே டிரான்ஸ்பர் செய்து வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன் என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.

இந்த சம்பவம் மாநில அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜ கண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனைத்தொடர்ந்து, ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தன. இதுவெறும் கண்துடைப்பு நடவடிக்கை தான் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் இலாகா மாற்றத்திற்கு, போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் பணம் சிக்கியதும் முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது.
இதனிடையே, பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஓவை சாதி ரீதியாக பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பட்டியலின பிடிஓவை அவமதித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications