செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடை கிடையாது.. உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல்! அமைச்சரவை மாற்றம்?
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடை கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது உறுதி. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தனை காலம் செந்தில் பாலாஜிக்காகவே அமைச்சரவை மாற்றம் நடக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். ஆனால் ஸ்டாலின் அவருக்காக காத்து இருக்கிறாரா? அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை? சீனியர்கள் சிலர் வேலை பார்க்கவில்லை என்று புகார் உள்ளது. இதை எல்லாம் ஆய்வு செய்வதால்.. தாமதம் ஆவதாக கூறப்பட்டது.
அவர் வந்ததும்.. அவரையும் சேர்த்துக்கொண்டு அமைச்சரவையை மாற்றலாம். இப்போது மாற்றினால்.. பின்னர் மீண்டும் மாற்ற வேண்டி இருக்கும். அவர் சில நாட்களில் வந்துவிடுவார். அதுவரை காத்து இருக்கலாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. அவர் இன்று அல்லது நாளை வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்.. அவருக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பின் வரும் நிபந்தனைகள் விதிக்கப்ப்பட்டு உள்ளன: 25 லட்சம் ரூபாய்க்கு இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் .விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாய்தா வாங்க கூடாது. வெளிநாடு செல்ல கூடாது. சாட்சிகளை கலைக்க கூடாது. அமைச்சர் ஆவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றம் அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அவர் இந்த பயணத்திற்கு பின் தமிழ்நாடு வந்து செந்தில் பாலாஜியை சந்திப்பார். அதன் பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.
இதோடு இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இதில் துணை முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு அரசு பணிகள் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்பதால் திமுகவிற்கு தீர்ப்பு சாதகமாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications