பகீர் கிளப்பும் *401*.. பதைபதைக்க வைக்கும் பார்சல் மோசடி! உங்களுக்கும் மோசடி ஃபோன் கால் வரலாம்
சென்னை: பார்சல் டெலிவரி என்ற பெயரில் கால் செய்து *401* என்ற கோட் மூலம் ஓடிபி எண்ணை திருடி மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர அதை பயன்படுத்தி மோசடிகளும் அதிகரித்து வருகிறது. காவல்துறை சைபர் கிரைம் என்ற பிரிவை தொடங்கி அரசும் நடவடிக்கை எடுத்தாலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு இணையாக அதை பயன்படுத்தி மோசடி செய்வதில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மோசடி தான் தற்போது செல்போன் பயனர்களை குறி வைத்து அரங்கேற்றப்பட்டு வருவது தற்போது அம்பலமாகி இருக்கிறது.

இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒரு நபருக்கு போன் செய்து, "முகவரி உள்ள குளறுபடி காரணமாக உங்களுக்கு வர வேண்டிய பார்சலை டெலிவரி செய்வதில் பிரச்சனை உள்ளது. எனவே டெலிவரி செய்யும் ஊழியர் எண்ணை உங்களுக்கு அனுப்புகிறோம். *401* என்ற எண்ணை டைப் செய்து அவரது எண்ணை போட்டு டயல் செய்யுங்கள்." என்று கூறுகிறார்கள். இப்படி பல நபர்களுக்கு செல்போன் அழைப்புகள் சென்று இருக்கிறது. இதுபோல் தனக்கு போன் கால் வந்ததாகவும், அது பணம் பறிக்கும் மோசடி கும்பலின் வேலை என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார் பெண் ஒருவர்.
எக்ஸ் தளத்தில் அந்த பெண் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண் தெரிவித்து உள்ளதாவது, "எனக்கு ஒரு போன்கால் வந்தது. அவர்கள் முகவரியில் சிக்கல் இருப்பதால், டெலிவரி செய்யும் நபரின் எண்ணை கொடுப்பதாகவும், நிறுவனத்தின் நீட்டிப்பு குறியீடான *401* என்ற எண்ணை டைப் செய்து அவரது எண்ணை போட்டு கால் செய்யுங்கள். இந்த கோடை டைப் செய்யாமல் கால் செய்தால் பார்சல் டெலிவரி செய்யப்படாது. என்று கூறினார்கள்.
This news item has appeared in India Today as well..
— AstroCounselKK🇮🇳 (@AstroCounselKK) October 31, 2023
MUST WATCH & Share Max for welfare of all .
Extreme CAUTION ⚠️ 😳 pic.twitter.com/biPFBpIY1v
இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே கூகுளில் *401* என்ற எண் பற்றி தேடினேன். அப்போதுதான் அது கால்களை வேறு ஒரு எண்ணுக்கு ஃபார்வேர்டு செய்யும் கோட் என்பது தெரியவந்தது. நான் அதை டைப் செய்தால் எனது எண்ணுக்கு வரும் அனைத்து கால்கள், மெசேஜுகள், ஓடிபி எண்கள் போன்றவை *401* என்ற கோடுக்கு பின் டைப் செய்யப்பட்ட எண்ணுக்கு போகும். அதன் மூலம் பண மோசடி செய்ய முடியும்." என்று தெரிவித்து உள்ளார்.
இந்த வீடியோவை பொதுமக்கள் பலர் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவின் கமெண்டில் ஏராளமான எக்ஸ் பயனர்கள் தங்களுக்கும் இதுபோன்ற அழைப்பு வந்ததாக கருத்திட்டு உள்ளார்கள். ஏடிஎம் கார்டு மீது உள்ள 16 நம்பரை கேட்டு மோசடி செய்து வந்த கும்பல் இப்போது அனைத்துக்கும் அனுமதி அளிக்கும் ஓடிபி எண்ணை திருடி மோசடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications