கலங்கி நின்ற இஸ்ரோ சிவன்.. தோளை தட்டி ஆறுதல் சொன்ன மோடி! பாஜக பிரசார வீடியோவில் இதை கவனிச்சீங்களா
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரசார வீடியோவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனை பிரதமர் மோடி சமாதானப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த காட்சிகள் விவாதங்களை கிளப்பியுள்ளன.
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

2019 ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. செப். 2ம் தேதி விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. எல்லாம் திட்டமிட்டபடி சரியாக போய்கொண்டிருந்த நிலையில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
அதாவது, தரையிறங்க சில விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. ரூ.978 கோடி செலவில் நாம் எடுத்த முயற்சிகளை அனைத்தும் ஒரே நொடியில் தோல்வியை தழுவியது. இந்த சமயத்தில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் இறங்கும் நிகழ்வைப் பார்வையிட பிரதமர் மோடி இஸ்ரோ வந்திருந்தார்.
மிஷன் தோல்வியடைந்தது குறித்து விஞ்ஞானிகளுக்கு ஆவர் ஆறுதல் கூறினார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உடனே சிவனைத் தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துத் தேற்றினார் பிரதமர் மோடி. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், பாஜக வெளியிட்டுள்ள பிரசார வீடியோவில், இந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இது குறித்து பல்வேறு தரப்பினரும் ஆதரவும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். “மிகப்பெரிய மிஷன் தோல்வியடைந்ததை கூட பொருட்படுத்தாமல், விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆதரவளித்தது நல்ல விஷயம்தான். இது மக்களுக்கும் தெரிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பிரசார வீடியோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன” என்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.
அதேநேரம், ஆறுதல் சொல்வதையெல்லாமா தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்துவது? என்று மற்றொரு தரப்பினர் கேள்வியெழுப்பியுள்ளனர். எனவே, சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications