மாணவர்களிடையே ‘கூல் லிப்’ போதை.. பற்களில் கரை உள்ளதா? எங்கே விற்பனை? ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கரைகள் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க, அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும். அந்தவகையில், அண்மையில் நடந்த கூட்டத்தின்போது, மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணிக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் 'கூல் லிப்' உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பள்ளிகளில் மருத்துவ சோதனையின்போது மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும், போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கறை மாணவர்களின் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாரத்தின் முதல் நாள் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், தேவையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும், போதைப் பொருள் இருக்கும் கடைகள் குறித்து காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications