Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெற்றோர்களே ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு! குழந்தைகளுக்கு இப்படித் தான் கற்பிக்க வேண்டும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்கும் விதங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை பாடம் எடுத்துள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது அதன் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது இந்த தொகுப்பு.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இது தொடர்பான விவரம் வருமாறு;

குழந்தைகள்

குழந்தைகள்

நாம் பிறந்த நொடியிலிருந்து இறுதிநொடி வரை கற்றுக்கொண்டே இருக்கிறோம். நமது உலகைப் பற்றியும் சுற்றுச்சூழலைப் பற்றியும் நமது புலன்கள் வாயிலாகவே அறிந்துகொள்கிறோம். குழந்தைகளும் சிறுவர்களும் தங்கள் புலன்கள் வாயிலாகவே உலகைப் புரிந்துகொள்கிறார்கள்.
இதிலிருந்தே அவர்களின் கற்றல் பயணம் தொடங்குகிறது. அழுதால் உணவு கிடைக்கும், உதவி செய்தால் கைதட்டல் என்ற பாராட்டு கிடைக்கும் என தனது ஒவ்வொரு செயலுக்கும் பெறக்கூடிய எதிர்வினைகளில் இருந்து குழந்தை கற்றுக்கொள்கிறது.

புரிய வைக்க

புரிய வைக்க

குழந்தைகளுக்கு புரியவைக்கவென்று ஒரு மொழி இருக்கிறது. அது மிக மிக எளிமையானது. இந்த எளிமை கைவரவில்லை எனில் குழந்தைக்கு நாம் சொல்வது புரியாமல் போய்விடும். ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இயல்பிலேயே ஆர்வமுள்ள குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் கற்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. சரியான, தகுந்த கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தினால் போதும்.

ஆர்வத்தை தூண்டனும்

ஆர்வத்தை தூண்டனும்

எனவே குழந்தைகளுக்குள் ஆர்வம் என்னும் தீயைத் தூண்டிவிடுவதே நம் வேலையாக அமைய வேண்டும். கேள்வி கேட்பதற்கும் ஆராய்ந்து பார்ப்பதற்கும் வாய்ப்பையும் சூழலையும் வழங்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் கற்றுக்கொள்ளும் முறை மாறுபடுகிறது. அதற்கேற்ப கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும்.

 கற்றுக் கொள்

கற்றுக் கொள்

குழந்தைகள், தங்களைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியும் பெரியவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே செய்வதன்மூலமும் கற்றுக்கொள்கிறார்கள். முதல் சில ஆண்டுகளில் தன்னைச் சுற்றி உள்ளவற்றை, நடப்பவற்றை உற்று நோக்குவதன் வாயிலாகவே குழந்தை கற்றுக்கொள்கிறது.

வகுப்பறை

வகுப்பறை

இயல்பாகவே குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் எதையாவது செய்து கொண்டும் இருப்பவர்கள். நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை, மணிக்கணக்கில் ஒரு மேசையில் அமர்ந்து ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல. இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு குழந்தையும் செய்து பார்த்து உணர்ந்து கற்பதற்கு ஏற்றவகையில் வகுப்பறை செயல்பாடுகளால் நிறைந்திருக்க வேண்டும்.

8 வயதிற்குள்

8 வயதிற்குள்

0-8 என்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கான முக்கியமான காலக்கட்டம். இக்காலக்கட்டத்தில் குழந்தைகள், விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். மற்ற பருவங்களைவிட இப்பருவத்தில் அவர்களின் உள்வாங்கும் தன்மை சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு அல்லது செயல்பாடுகளே கற்றுக்கொள்ள உதவும். இதனடிப்படையில் கற்பித்தல் முறை அமையவேண்டும்.

அனுபவ கற்றல்

அனுபவ கற்றல்


குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த நாள்முதல் ஏழு ஆண்டுகள் வரை குழந்தைகள் உணர்ந்து அனுபவித்து அறியும் "அனுபவ கற்றல்" நடைபெறுகிறது. பாடல்கள், கதைகள், களப்பயணங்கள், கலைகள், கவிதைகள், உடலியக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் கற்றுக்கொண்டதை நெடுங்காலம் நினைவகத்தில் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.

 ஒவ்வொரு விதத்தில்

ஒவ்வொரு விதத்தில்

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கற்றுக் கொள்கிறது. ஒரு குழந்தை கேட்பதாலும், வேறொரு குழந்தை பார்ப்பதாலும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். எனவே கற்பித்தலும் இப்படி அனைத்து விதத்திலும் இருக்கவேண்டிய தேவையுள்ளது. "நீங்கள் கற்பிக்கும் முறை வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் கற்பிக்க வேண்டும்." என்றார் இக்னேசியா எக்ஸ்ட்ரடா - இதனடிப்படையிலேயே கற்பித்தல் நிகழவேண்டும்.

மகிழ்ச்சியான முறையில்

மகிழ்ச்சியான முறையில்

மன அழுத்தமோ பயமோ இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் கற்றுக்கொண்டால்தான் குழந்தைக்கு எளிதில் பாடங்கள் புரியும்.
நமது கல்விமுறை முழுமையும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். அதாவது, போட்டியின் அடிப்படையில் அல்லாமல், குழந்தைகளின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், அனுபவித்துக் கற்றுக்கொள்வதாக மாற வேண்டும். கற்றுக்கொண்டவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

கற்றல் இடைவெளி

கற்றல் இடைவெளி

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தை 2021இல் இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே 2022ஆம் ஆண்டிற்குள் நுழைகிறது. நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வருகையில் இந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை பள்ளி வகுப்பறையில் சரி செய்ய வேண்டி இருக்கிறது.

 இணையவழி வகுப்புகள்

இணையவழி வகுப்புகள்

இணையவழி வகுப்புகள் நடந்திருந்தாலும், இணையம் மெதுவாக வேலை செய்யும் கிராமங்களில் பாடங்களை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தன. போலவே, ஸ்மார்ட் போன்கள் இல்லாத குடும்பங்களும் உண்டு. அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மற்ற குழந்தைகளுடையதைவிட அதிகம். இந்தத் தேவையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டில் 1-3 வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது.

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும்

2022-23 கல்வியாண்டில் தொடங்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025ல் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பது. அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் 'எண்ணும் எழுத்தும்' தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+