கனமழை எதிரொலி.. புதுவை, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: நாளை திங்கட்கிழமை புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக நாளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர்ச்சியாக இன்று மழை விட்டு விளாசி வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் என பரவலாக மழை பெய்து வருகிறது.

நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான் கனமழை முன்னெச்செரிக்கை நவடிக்கையாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக கூறுகையில், நாளையும் புதுவை, காரைக்காலில் கனமழை எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நாளை திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
