'எத்தன சாமி வந்ததையா' பாட்டை பாடுனாரு.. வேற என்னலாம் சொன்னாரு தனுஷ்? ரசிகைகள் சொன்ன தகவல்!
சென்னை: சென்னையில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்க மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து வெள்ளி காமாட்சி விளக்கை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது அரங்கில் நடந்தது என்ன? தனுஷ் என்ன பேசினார்? என்ன பாடல் பாடினார் என்பது தொடர்பாக ரசிகைகள் சொன்னதை பார்க்கலாம்.
சென்னையில் நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பாக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் தனுஷ் வருவதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில், மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இருப்பினும் தனுஷ் வரும் வரை கொட்டும் மழையில் மகளிரணி நிர்வாகிகள் காத்திருந்தனர்.

இதன்பின் மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், மகளிருக்கு காமாட்சி விளக்கு பரிசாக தனுஷ் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து ரசிகர்களை பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனுஷ் நீண்ட நேரம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசி முடித்தார்.
இதுகுறித்து தனுஷ் நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகள் பேசுகையில், தனுஷ் தாய்யை பற்றி பாட்டு பாடினார். அவர் அம்மா பற்றி பாடியது ரொம்ப நன்றாக இருந்தது. அதன்பின் அவரின் ரசிகராக மாறிவிட்டேன். 5 மணி நேரம் காத்திருந்தாலும், அவரை பார்த்த பின் உற்சாகமாக உள்ளது. எத்தனை சாமி வந்ததையா பாடலை பாடினார்.
தனுஷின் அத்தனை படங்களையும் பார்ப்போம். மேடைக்கு சென்ற உடன் கைகொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டோம். எங்களுக்குலாம் ஹார்ட் லப்டப் லப்டப்னு துடிக்கிது. தனுஷ் தான் ரொம்ப பிடிக்கும். நாங்களாம் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. வேற மாறி.. வேற மாறி என்று தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமல்லாமல் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ரசிகைகள் வந்துள்ளனர்.
கர படத்திற்கு பின் தனுஷ் ரசிகர் மன்ற கட்டமைப்பை வலுப்படுத்த தொடங்கி இருக்கிறார். அதேபோல் படத்தின் தொடக்க விழாக்களை பொது வெளியில் நடத்தி வருகிறார். இதனால் நாளுக்கு நாள் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருவதாக தெரிகிறது. விரைவில் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பல்வேறு மாவட்டங்களில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
