இந்தியாவை நம்பி சிங்கப்பூர் செய்த மெகா முதலீடுகள்.. இப்போ வேல்யூ மட்டும் ரூ.1,26,299 கோடி!
சிங்கப்பூர்: இந்திய பங்குச்சந்தையில் சிங்கப்பூர் அரசு கணிசமான முதலீடுகளை வைத்துள்ளது. 2026 செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 36 நிறுவனங்களில் சிங்கப்பூர் அரசு முதலீடு செய்துள்ளது. இந்த பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.1,26,299 கோடியாக உள்ளது. சிங்கப்பூர் அரசு நம்பி முதலீடு செய்திருக்கும் அந்த நிறுவனங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக எந்தவொரு நாடும் வளரும் நாடுகளில் கணிசமான முதலீடுகளை செய்யும். எந்த நாடுகளில் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறதோ.. அந்த நாடுகளில் வல்லரசு நாடுகள் முதலீடு செய்யும். அதன்படி சிங்கப்பூர் அரசும் இந்தியாவில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது.

சிங்கப்பூர் முதலீடு
கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் அரசு முதலீடுகளின் சந்தை மதிப்பு ரூ.1,65,129 கோடியாக இருந்தது. அதேநேரம் அதன் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் கணிசமாக சரிந்த நிலையில், இப்போது சிங்கப்பூர் முதலீடுகளின் மதிப்பு சுமார் 24% குறைந்து ரூ.1,26,299 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டான 2027ல் சிங்கப்பூர் அரசு முதலீடு செய்துள்ள பங்குகளில் சுமார் 14 பங்குகள் பாசிட்டிவ் ரிட்டர்னை கொடுத்திருக்கிறது. சில பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு முதலீடு செய்து அதிக லாபம் பார்த்த பங்குகளின் விவரத்தை நாம் பார்க்கலாம்.
அதிகபட்சம் உயர்ந்த பங்குகள் எது?
முதலில் SEDEMAC Mechatronics. இந்த பங்கு கடந்தாண்டு உடன் ஒப்பிடும்போது இதுவரை 101% உயர்ந்துள்ளது. ரூ.1,511ஆக இருந்த பங்கு விலை ரூ.3,034ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 2026 காலாண்டு நிலவரப்படி, நிறுவனத்தில் சிங்கப்பூர் அரசு 2.32% பங்குகளை வைத்திருந்தது. அக்டோபர் 23 நிலவரப்படி, இந்த பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.310 கோடி.
அதேபோல Sona BLW Precision Forgings.. இந்த பங்கு 56% உயர்ந்து, ரூ.482லிருந்து ரூ.753ஆக அதிகரித்துள்ளது. இதில் சிங்கப்பூர் அரசின் பங்கு 6.38% உள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.2,999 கோடியாக இருக்கிறது. அதேபோல முக்கியமான மருந்து நிறுவனமான Divi's Laboratories 51% உயர்ந்துள்ளது. ரூ.5,947லிருந்து இதன் பங்கு ரூ.8,984-ஆக பங்கு விலை அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசுக்கு இதில்2.84% பங்குகள் உள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.6,771 கோடியாக உள்ளது..
கணிசமாக உயர்ந்த பங்குகள்
அடுத்து Craftsman Automation.. இந்த பங்கு 50% உயர்ந்து ரூ.6,989லிருந்து ரூ.10,482ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசுக்கு 2.71% பங்குகள் உள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.742 கோடியாகும்.. ஜொமேட்டாவின் தாய் நிறுவனமான Eternal, 38% உயர்ந்து ரூ.229லிருந்து ரூ.317ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசுக்கு இதில் 1.18% பங்குகள் உள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.3,621 கோடியாக உள்ளது.
அதேபோல JSW Infrastructure பங்குகள் 31% உயர்ந்து ரூ.241லிருந்து ரூ.316ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசின் பங்கு 1.62% உள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.1,194 கோடி. The Phoenix Mills பங்குகள் 23% உயர்வுடன் ரூ.1,505லிருந்து ரூ.1,858ஆக அதிகரித்துள்ளது. இதில் சிங்கப்பூர் அரசின் பங்கு 1.59% இருக்கும் சூழலில், மதிப்பு ரூ.1,059 கோடியாக உள்ளது.
சிங்கப்பூர்
மேலும், Info Edge (India) என்ற நிறுவனத்தின் பங்குகள் 21% உயர்ந்து ரூ.976லிருந்து ரூ.1,185ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசின் பங்கு 1.6% அதிகரித்து, அதன் மதிப்பு ரூ.1,066 கோடியாக இருக்கிறது. International Gemological Institute என்ற நிறுவனத்தின் பங்குகள், 20% உயர்ந்து ரூ.318லிருந்து ரூ.382ஆக அதிகரித்துள்ளது. இதில் சிங்கப்பூர் அரசின் பங்கு 1.32% இருக்கும் நிலையில், மதிப்பு ரூ.219 கோடியாக இருக்கிறது. Samhi Hotels பங்குகள் மதிப்பு 20% உயர்ந்து ரூ.128லிருந்து ரூ.153ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் அரசின் பங்கு 6.36% அதிகரித்து, அதன் மதிப்பு ரூ.217 கோடியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
