கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! லிஸ்ட்டில் உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க
சென்னை: கனமழை காரணமாக நேற்று போல இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சேர்த்தும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழ்நாட்டை கடந்து அரபிக்கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் இது வலுப்பெற்றிருப்பதால், கடந்து செல்லும் பாதையில் கனமழையை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், இன்று டெல்டாவுடன் சேர்த்து தென் மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி
தென்காசி
விழுப்புரம்
நெல்லை
தஞ்சை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல
மதுரை
திண்டுக்கல்
விருதுநகர்
சேலம்
சிவகங்கை
மயிலாடுதுறை
கடலூர்
ராமநாதபுரம்
தேனி
கரூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
தருமபுரி
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் மணல்மேடு பகுதியில் 25 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதேபோல திருநெல்வேலியில் 20 செ.மீக்கு அதிகமாக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "திருநெல்வேலி 20 செ.மீ, மணிமுத்தாறு அணை 30 செ.மீ, மாஞ்சோலை பகுதியில் 40 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார். திருநெல்வேலியின் ஊத்து பகுதியில் சுமார் 50 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications