School Leave: ஜனவரியில் மட்டும் 15 நாட்கள் லீவு.. பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் உள்ளன. போகி பண்டிகைக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதையெல்லாம் கணக்கிட்டால் வார விடுமுறையுடன் சேர்த்து ஜனவரியில் மட்டும் சுமார் 15 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

School Leave

ஜனவரியில் பள்ளி விடுமுறைகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு விடுமுறை வரும் 4 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அரையாண்டு விடுமுறையைப் பொறுத்தவரை மொத்தம் 12 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறையை கொண்டாட தங்கள் பிள்ளைகளை தாத்தா, பாட்டி வீடுகளுக்கு பெற்றோர்கள் பலரும் அனுப்பி வைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு பலரும் சென்றுள்ளனர். அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் கோயில்கள், சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வரும் ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல தொடங்க உள்ளது. ஜனவரி மாதத்தைப் பொறுத்தவரை எப்போதுமே அரசு விடுமுறை அதிகம் உள்ள மாதங்களில் ஒன்றாக இருக்கும். ஏனெனில் தமிழர் பண்டிகையான பொங்கல் ஜனவரி மாதத்தில் வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

11 நாட்கள் அரசு விடுமுறை

பள்ளி படிக்கும் காலத்தில் புதிய காலண்டர் வந்ததும், ஜனவரியில் எத்தனை நாட்கள் லீவு வருகிறது, என்னென்ன நாட்களில் லீவு வருகிறது என பார்த்த நினைவு 90 கிட்ஸ்கள் மனதில் வந்து போகலாம். சரி, அதெல்லாம் இருக்கட்டும், இங்கே விஷயத்திற்கு வருவோம்.

வரும் ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகின்றன. இது மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது. ஜனவரி முதல் 4 நாட்கள் அரையாண்டு விடுமுறையில் கழிந்துவிடும். அதுபோக, பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது.

தொடர்ந்து 3 நாட்கள்

அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை திருவள்ளூர் தினம் (ஜன.16) அரசு விடுமுறை நாட்கள்தான். ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் தினமும் அரசு விடுமுறையாகும். அதன்பிறகு ஜனவரி 26 குடியரசு தினம் வருகிறது. குடியரசு தினம் திங்கள் கிழமை என்பதால், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

வார விடுமுறையையும் சேர்த்தால் 15 நாட்கள்

பொங்கல் பண்டிகைக்கு வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்களும், குடியரசு தினத்திற்காக சனிக்கிழமை தொடங்கி திங்கள் கிழமை வரை 4 நாட்களும் லீவு கிடைக்கின்றன.

அதுபோக தற்போது உள்ள அரையாண்டு விடுமுறை 4 நாட்கள் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளன. இத்துடன் வார விடுமுறை நாட்களையும் சேர்த்தால் 15 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகின்றன.

மாணவ, மாணவிகள் ஹேப்பி

31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விடுமுறை நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதால், மாணவர்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+