கழுத்து நெரித்து.. கை, காலை கட்டி.. பாழுங்கிணற்றில் மூழ்கடித்து.. சிறுவன் கொலை.. செங்கல்பட்டில் ஷாக்

9ம் வகுப்பு மாணவனை கொன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: கை, கால் கட்டப்பட்டு.. கழுத்து நெரிக்கப்பட்டு.. பாழுங் கிணற்றில் சடலமாக கிடந்தான் சிறுவன் புருஷோத்தமன்... "புருஷோத் ரொம்ப நல்ல பையன்..ங்க.. யார் தப்பு செஞ்சாலும் துணிச்சலா கேள்வி கேட்பான்.. யாரும் போதைக்கு அடிமையாகாதீங்க.. கஞ்சா அடிக்காதீங்கன்னு சொல்லிட்டே இருப்பான்.." என்று சிறுவனின் இறப்பு குறித்து கிராம மக்கள் கண்ணீர் மல்க கூறுகிறார்கள்..

விழுப்புரம் அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகன் - உஷா.. இவர்களுக்கு 2 மகன்கள்.. உஷா கணவரை பிரிந்து செங்கல்பட்டு வேண்பாக்கம் பகுதியில் மகன்களுடன் வசித்து வருகிறார்.

school student murdered in chengalpattu

இதில் புருஷோத்தமன் உஷாவின் மூத்த மகன்.. 9-ம் வகுப்பு படித்து வந்தான்.. ஆன்மீகத்தில் நிறைய ஈடுபாடு உள்ளவன்.. ஏகாதசி அன்னைக்கு பக்கத்தில இருக்கும் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பை பார்த்துட்டு வரேன்னு கோயிலுக்கு போனவன், அதோடு வீடு திரும்பவே இல்லை..

பல இடங்களில் மகனை தேடி அலைந்தார் உஷா.. கடைசியில் போலீசில் புகார் சொல்லவும், அவர்களும் சிறுவனை தேடி வந்தனர்.. பிறகுதான் வெண்பாக்கத்தில் உள்ள பாழுங்கிணற்றில் புருஷோத்தமனின் சடலத்தை கண்டனர்.. அவனது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.. அந்த கிணற்றில் மிதந்தபடி கிடந்தான் புருஷோத்தமன்.. உடலை மீட்ட போலீசார், இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

ஆனால் புருஷோத்தமன் பற்றி அந்த ஊர் மக்கள் ஏராளமாக பாராட்டி பேசுகிறார்கள்.. "ரொம்ப நல்ல பையன்.. இந்த வயசிலேயே நல்ல பக்தி.. திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் படிப்பான்.. ஸ்கூல்லயும் இவனுக்கு நல்ல பேர்.. இந்த வேண்பாக்கம் பகுதியில் நிறைய பேர் கஞ்சா பிடிப்பார்கள்.. அவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க போவான்.. யார் தப்பு செஞ்சாலும் துணிந்து கேட்பான், யாருமே போதைக்கு அடிமையாக கூடாதுன்னு சொல்லிட்டே இருப்பான்" என்று கண்ணீருடன் சொல்கிறார்கள்.

புருஷோத்தை யார் இப்படி கொடூரமாக கொன்றார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், புருஷோத்தமன் சடலமாக கிடந்த இடத்தில்தான் நிறைய இளைஞர்கள் கஞ்சா அடிப்பார்களாம்! அப்படி கஞ்சா புகைத்தபோது புருஷோத்தமனுடன் தகராறு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாமோ அல்லது கஞ்சா விற்பனைக்கு எதிராக பேசியதால் கஞ்சா வியாபாரம் செய்பவர்கள் யாராவது புருஷோத்தை கொலை செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் இதை பற்றின உண்மை நிலவரம் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+