அப்பா கேட்டார்.. ஸ்கூல்ல தந்ததுன்னு சொன்னேன்.. கையில் செருப்புடன் அமைச்சருக்கு நன்றி சொன்ன மாணவன்!
Recommended Video

சென்னை: "இந்த வருஷ செருப்பு ரொம்ப ஸ்டைலா, கலரா, சூப்பரா இருக்கு" என்று செருப்பை கையில் வைத்துக் கொண்டு அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா காலணி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த காலணியை பெற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் வீடியோ வெளியிட்டுள்ளான்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா கூலிப்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஜஸ்டின் தாமஸ்தான் அவன்.
|
அமைச்சர் செங்கோட்டையன்
வீடியோவில் அவன் பேசும்போது தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்துள்ளான். முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் முயற்சி செய்து மாணவன் இந்த வீடியோவில் பேசியிருப்பது கொள்ளை அழகு. அதில் மாணவன் தெரிவித்துள்ளதாவது:

சந்தோஷப்பட்டோம்
"கிளாஸ்க்கு வந்தவுடனேயே இந்த வருஷம் செருப்பு தரப்போறதா சொன்னாங்க. ஆனா வழக்கம்போல இருக்கும்னுதான் நினைச்சோம். இதை எடுத்து காட்ட உடனேயே நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம். இதுக்கு முன்னாடி தந்த காலணியெல்லாம் கடினமா இருக்கும். போடவே முடியாது.

ஏதுடா புது செருப்பு?
அதை நாங்க வாங்கிட்டு போய் செருப்பு இல்லாதவங்களுக்கோ இல்லாட்டி முள் செடி வெட்றவங்களுக்கோ குடுத்துடுவோம். இந்த வருஷம் செருப்பு ரொம்ப ஸ்டைலா, கலரா, சூப்பரா தந்திருக்காங்க. இதை நான் வீட்டுக்கு போட்டுட்டு வந்தேன். இதை பார்த்துட்டு எங்க அப்பா இது ஏதுடா புது செருப்பு, யாருடா வாங்கி தந்ததுன்னு கேட்டார். நான் உடனே ஸ்கூல்ல தந்ததுப்பான்னு சொன்னேன். ஆச்சரியப்பட்டார்.

ஐயா செங்கோட்டையன்
எங்க ஏரியாவில நிறைய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் இருக்குது. இருந்தாலும் இன்னைக்கு நாங்களும் அவங்க அளவுக்கு எல்லாமே படிக்க ஆரம்பிச்சிட்டோம். செங்கோட்டையன் ஐயா புது புது திட்டங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலில் கொண்டு வந்திட்டு இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையை சிறப்பாக செய்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் கிளாஸ்
எங்களுக்கு யூனிபார்மும் தர்றாங்க. அது நல்லாதான் இருக்கு. ஆனா செகண்ட் கிளாஸ் மாதிரி தெரியுது. ஃபர்ஸ்ட் கிளாஸ் தரத்தோட அந்த யூனிமார்மும் கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும். நாங்க எல்லாருமே அப்படித்தான் எதிர்பார்க்கிறோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications