என்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்!
பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: "என்கிட்ட யாருமே சரியா பேசுறது இல்லைம்மா" என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்த பள்ளி ஆசிரியர் காயத்திரி திடீரென பினாயிலை எடுத்து குடித்தும், தூக்கு போட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்.
புளியந்தோப்பு பென்ஷனர் தெருவைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா - காயத்ரி. கிருஷ்ணா, மவுன்ட்ரோடில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். காயத்ரி, கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை செய்தவர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற 7 வயது மகள் உள்ளார். டீச்சர் காயத்ரிக்கு 29 வயதாகிறது.

"என்கிட்ட எந்த டீச்சரும் சரியா பேசறது இல்லை, கிண்டல் செய்றாங்கம்மா" என்று தன் தாயிடமும், கணவனிடமும் சமீப காலமாகவே, அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டு கொண்டே வந்திருக்கிறார் காயத்திரி.
இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்கூலில் இருந்து வந்த காயத்ரி, திடீரென பாத்ரூமுக்குள் நுழைந்து, அங்கு வைத்திருந்த பினாயிலை தூக்கி குடித்துவிட்டார். இதை பார்த்து பதறி போன குடும்பத்தினர், அவரை காப்பாற்றி.. சமாதானமும் செய்தனர். ஆனாலும் காயத்ரிக்கு மனசே ஆறவில்லை. அதனால் அன்னைக்கு ராத்திரியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் மனைவி தொங்குவதை கண்ட கணவன், பதறியடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இது சம்பந்தமாக ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பள்ளியில் காயத்ரியிடம் ஏன் யாரும் சரியாக பேசுவதில்லை, அவரிடம் யாராவது தவறாக நடந்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்று விசாரித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications