பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்.. தங்கம் தந்த சர்ப்ரைஸ்.. பட்ஜெட்டில் அசத்தலான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு நிதி கொடுக்காமல் போனாலும்.. தமிழ்நாட்டிற்கு தன்மானம்தான் முக்கியம்.. ஆசிரியர் சம்பளம் மாநில நிதியில் தொடர்ந்து வழங்கப்படும்.. மத்திய அரசு கொடுக்காத நிதியை மாநில அரசே கொடுக்கும்.. என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

2025 tamil nadu budget 2025 tamil nadu budget

தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது.

நிதி பிரச்சனை

இதன் காரணமாக கடுமையான நிதி பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மத்திய அரசு நிதி கொடுக்காமல் போனாலும்.. தமிழ்நாட்டிற்கு தன்மானம்தான் முக்கியம்.. ஆசிரியர் சம்பளம் மாநில நிதியில் தொடர்ந்து வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

மும்மொழிக் கொள்கை ஏற்க மறுப்பால் ரூ.2152 கோடி தராத மத்திய அரசை கண்டிக்கிறோம். ஆனால் அதற்காக அவர்களின் 3 மொழிக்கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது.

இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் பணம் தரவில்லை என்றாலும் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். இதனால் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவோம். மத்திய அரசு கொடுக்காத நிதியை மாநில அரசே கொடுக்கும். 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வுக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்கிறோம்., என்று கூறி உள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை

முன்னதாக இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டனத்தில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை கையெழுத்து போட மாட்டோம். #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+