பள்ளி வேன் மோதி மாணவன் பலி.. 6 கேள்விகளை கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம் குறித்து 6 கேள்விகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித் ஆழ்வார்திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்ற போது தீக்சித் ஏதோ ஒரு பொருளை வேனில் விட்டுவிட்டதால் அதை எடுப்பதற்காக வேனை நோக்கி திரும்பி வந்துள்ளார்.

ஓட்டுநர் பூங்காவனம்
அப்போது வேனை அதற்கான நிறுத்துமிடத்தில் நிறுத்துவதற்காக அதன் ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால் வேனில் ஏற முயற்சித்த தீக்சித் தவறி கீழே விழுந்தார். அப்போது வேனில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த தீக்சித் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

சிறுவன் பலி
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர்.

பெண் ஊழியர் கைது
அது போல் பள்ளி பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த துறை கேட்ட 6 கேள்விகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

6 கேள்விகள்
விபத்து நடைபெற்றது தெரிந்து பிற்பகல் வரை தாளாளர் வராதது ஏன்? பள்ளி நிர்வாகத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பொறுப்பாளர்கள் இல்லாதது ஏன்? மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அலட்சியம் இல்லாமல் 64 வயது முதியவரை ஓட்டுநராக நியமித்தது ஏன்? பள்ளி வாகனத்திலிருந்து மாணவர்கள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனரா என்பதை பள்ளி முதல்வர் ஏன் உறுதி செய்யவில்லை? பள்ளி தொடங்கி முதல் பாட வேளைக்கு செல்லும் வரை மாணவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டிய உடற்கல்வி ஆசிரியர் விடுமுறையில் சென்றால் அவருக்கு மாற்றாக ஒருவரை நியமிக்காதது ஏன்? உள்ளிட்ட 6 கேள்விகளை பள்ளிக் கல்வித் துறை எழுப்பியுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications