சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி வருகை எதிரொலி.. வண்டலூர் சுற்று வட்டாரப் பள்ளிகளுக்கு நாளை கட்டாய லீவா?

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கலந்த கொள்ளும் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவிருப்பதால் கூட்டம் நடைபெறும் வண்டலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடி உட்பட அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் நாளை நடைபெறுகிறது. பாஜகவினரை விட அதிமுக, பாமகவினர் மிகப் பெரிய அளவில் கூடி தங்களது மாஸைக் காட்ட முயல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

schools ordered to shut in and around vandalur

இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

ஓயும் ஐ.நா.. ஓங்கும் அமெரிக்கா.. பலே அரசியல்.. இந்தியா -பாக். உரசல் கற்றுத் தரும் பாடம்! ஓயும் ஐ.நா.. ஓங்கும் அமெரிக்கா.. பலே அரசியல்.. இந்தியா -பாக். உரசல் கற்றுத் தரும் பாடம்!

இந்த நிலையில், வண்டலூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களுக்கும் நிர்வாகத்தினர் விடுமுறை விட்டுள்ளனராம்.

பிரதமரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருதி விடுமுறை அறிவித்துள்ளதாக ஆளுங்கட்சி தரப்பும், தேர்தல் கூட்டத்திற்கு ஆள் பிடிக்க பள்ளி வாகனங்கள் தேவைப்படுவதால் வற்புறுத்தி விடுமுறை விட வைத்துள்ளதாக எதிர்கட்சிகள் தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

English summary
Sources say that schools are ordered to shut tomorrow due to the visit of PM Narendra Modi in and around Vandalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X