சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான கஜா என்ற புயல், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

Schools will open tomorrow in delta districts which are affected by Gaja storm

[கஜா நிவாரண நிதி.. பேருக்கேத்த மாதிரி சிறுவன் நிறைநெஞ்சன் செய்த நிறைவான காரியம்!]

இதனால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இன்னும் அங்கு சரியாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் நாளை டெல்டா மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று செங்கோட்டை அறிவித்துள்ளார்.

புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நாளை மாலைக்குள் புத்தகங்கள் அந்த மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
School Education Minister K. A. Sengottaiyan announced today that schools will open tomorrow in delta districts which are affected by Gaja storm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X