சூரிய குடும்பத்திலேயே சூடான கிரகம்.. வெள்ளியை ஆய்வு செய்ய முடியுமா? விஞ்ஞானிகள் விளக்கம்
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஏற்கெனவே நிலவையும், செவ்வாய் கிரகத்தையும் ஆய்வு செய்திருக்கிறது. இந்நிலையில் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இந்த ஆய்வுக்கான சாத்தியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெள்ளி கிரகம் ஏறத்தாழ பூமியை போலவே இருந்தாலும், அது பூமியிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளி கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றுகிறது. எனவே அங்கு சூரியன் மேற்கில்தான் உதிக்கும். அதேபோல பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது எனில், வெள்ளி கிரகம் சுமார் 200 நாட்களுக்கும் மேல் எடுத்துக்கொள்கிறது. இதனால், இது சூரியனை சுற்றி வரும் காலமும், தன்னை தானே சுற்றி வரும் காலமும் ஏறத்தாழ சமமாக இருக்கும்.

மற்றொரு வித்தியாசமான அம்சம் என்னவெனில், நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் 8 கிரகங்களில், வேறு எந்த கிரகத்திலும் இல்லாத அளவுக்கு வெப்பம் வெள்ளி கிரகத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் வெள்ளி கோளின் வளிமண்டலத்தில் இருக்கும் சல்பூரிக் அமில மேகங்கள்தான். 'பூமி வெப்பமயமாதல்' என்று நாம் சொல்லும் நிகழ்வு வெள்ளி கிரகத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே வெள்ளி கிரகத்தை பற்றி அறிந்துக்கொள்வதன் மூலம் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து நாம் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவேதான் வெள்ளி நோக்கி அடுத்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இதுவரை நமக்கு கிடைத்த தகவலின் படி, இங்கு வளிமண்டலத்தின் அழுத்தமும் அதிகம். பூமியில் இருப்பதை போல 92 மடங்கு இங்கு அழுத்தம் அதிகம் என்பதால், நிச்சயம் வெள்ளி கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்ய முடியாது. வேறு எந்த கருவியும் வெள்ளி கிரகத்தில் செயல்படவும் செய்யாது. எனவேதான் வெள்ளி கிரகம் குறித்து அதிகமான தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், 1970 தொடங்கி தற்போது வரை ரஷ்யா 7 விண்கலன்களை வெள்ளி கிரகத்தில் தரையிறக்கியுள்ளது.
இதன் மூலம் வெள்ளி கிரகத்தின் தரை எப்படி இருக்கும்? அந்த கிரகத்தின் சத்தம் எந்த மாதிரியிருக்கும், பாறைகள். மண் துகள்களின் படங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இப்போது இஸ்ரோ ஒரு செயற்கைக்கோளை அனுப்ப இருக்கிறது. இது கிரகத்தின் தரை பகுதிக்கு போகாது. ஆனால், அதன் மேற்பரப்பில் சுற்றி வந்து, பல்வேறு தகவல்களை சேகரித்து நமக்கு அனுப்பும்.
இந்த தகவல்களை கொண்டு காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். மட்டுமல்லாது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைளை சர்வதேச நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியாவால் முடியும். எனவேதான் வெள்ளி கிரகத்தின் மீதான ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications