2025ல் எல்லாமே மாறுதே! 'ககன்யான்' திட்டம் இந்தியாவுக்கு ஏன் முக்கியம்? விஞ்ஞானிகள் சொல்வது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த பணியாற்றி வருகிறது. இந்த திட்டம் இந்தியாவுக்கு ஏன் முக்கியம் என்பது குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Scientists explain why Gaganyaan project is important for India

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் 40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது. அதாவது, இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒருவரை சோவியத் ரஷ்யா கடந்த 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.

சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். கடந்த 1917ம் ஆண்டு தொடங்கி 1990ம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டனது. நிலவில் முதலில் கால் வைத்தது மட்டும்தான் அமெரிக்கா செய்த ஒரே சாதனை. மற்றபடி முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர், விண்வெளிக்கு முதலில் உயிரினங்களை அனுப்பியது, மனிதர்களை அனுப்பியது, பெண்களை அனுப்பியது என சோவியத் ரஷ்யா ஏராளமான சாதனைகளை செய்தது.

மட்டுமல்லாது இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை சோவியத் ரஷ்யா தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது. அப்படி இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தவர்தான் ராகேஷ் ஷர்மா. இதன் பின்னர் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. எனவே இந்த ஏக்கத்தை போக்க ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முயன்று வருகிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்டேஸ்வரன் பிரத்யேகமாக சில தகவல்களை நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். அதாவது, "சர்வதேச அளவில் சீனா உட்பட பல நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிவிட்டது. ஆனால் இந்தியா அனுப்பவில்லை. இதற்கான ஒரு முயற்சிதான் இந்த ககன்யான் திட்டம். மட்டுமல்லாது எதிர்வரும் 2025ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையம் கலைக்கப்படுகிறது. இந்த மையம் பழையதாகிவிட்டது என்பதால் புது மையம் உருவாக்கப்படுகிறது.

இந்த புது விண்வெளி மையத்தில் நாம் இடம் பெற வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் இதற்கு மனிதர்களை நாம் விண்வெளிக்கு அனுப்பிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் குறைந்தபட்டசம் இந்த கோரிக்கையை நம்மால் எழுப்ப முடியும். எனவே இந்த வகையில் ககன்யான் திட்டம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் இடம் கிடைத்துவிட்டால், நாம் விண்வெளி ஆய்வு துறையில் புதிய சகாப்தத்தில் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தம்.

சர்வதேச விண்வெளி மையம் என்பது பூமியிலிருந்து சுமார் 420 கி.மீ உயரத்தில் நிலை கொண்டுள்ள ஒரு ஆய்வு மையமாகும். சமீப காலமாக அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு மேலெழுந்த நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்யா போராக வெடித்திருக்கிறது. எனவே சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியேறும் முடிவை ரஷ்யா அறிவித்துவிட்டது. இதன் காரணமாக 2030ம் ஆண்டுக்குள் புதிய விண்வெளி மையம் அமைய இருக்கிறது. இதற்காக ரஷ்யா, சீனாவுடன் கைகோர்க்கிறது. ஆக இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய விண்வெளி மையத்தில் இந்தியாவும் இணை மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு அங்கம்தான் ககன்யான் விண்வெளி திட்டம்.

அதேபோல இந்தியா தனியாக வரும் 2035ம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தை உருவாக்க வேண்டும் என்றும், 2040ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் எனவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+