"யுரேகா".. அந்தரத்தில் மிதக்கும் "கடல்கள்".. விஞ்ஞானிகளை தண்ணி குடிக்க வைத்த 43 கிரகங்கள்.. ட்விஸ்ட்
சென்னை: விண்வெளியில் உள்ள வெவ்வேறு 43 கிரகங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் முக்கியமான விஷயம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.
விண்வெளியில் உள்ள கிரகங்களில் நீர் இருக்கிறதா என்று பல காலமாக ஆராய்ச்சிகள் பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. நாசா தொடங்கி இஸ்ரோ வரை இது போன்ற ஆராய்ச்சிகளை பல நிறுவனங்கள் செய்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் அடியில் திட நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் நிலவில் ஒரு காலத்தில் நீர் ஓடியதற்கான ஆதாரங்களும் உள்ளன.

நீர் கிரகம்
ஒரு இடத்தில நீர் இருந்தால் அங்கே உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நீர் இருக்கும் இடத்தில் சிறிய செடி வளர்ந்தால் அதுவும் கூட உயிரினம்தான். இந்த நிலையில்தான் விண்வெளியில் உள்ள சில கிரகங்களில் தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த தண்ணீர் நாம் பார்க்க அதே திரவ வடிவத்தில் இருக்காது. வேறு வடிவத்தில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பாறைகள்
இது தொடர்பாக Science என்ற அறிவியல் இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. Institute of Astrophysics of the Canary Islands and the University of La Laguna என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டு உள்ளனர். அதில், உலகின் பெரும்பாலான நட்சத்திரங்களை சுற்றும் பல்வேறு கிரகங்களில் தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீர் கடலாக, அருவியாக, ஆறாக இல்லை. மாறாக பாறைகளுக்கு உள்ளே தண்ணீர் இருக்கிறது.

மிதக்கும் கடல்
கிட்டத்தட்ட மிதக்கும் கடல் போல இந்த பாறைகளுக்கு உள்ளே தண்ணீர் மிதந்து கொண்டு இருக்கிறது என்று அந்த ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. M-dwarf என்ற வகை நட்சத்திர குழுவை சுற்றும் கிரகங்கள் பலவற்றில் இது போன்று பாறைகளில் நீர் இருப்பதாக கூறப்படுகிறது. நட்சத்திரங்கள் மிகவும் வெளிச்சத்துடன் இருப்பதால், அதை சுற்றும் கிரகங்களில் எளிதாக இந்த ஆராய்ச்சிகளை செய்ய முடிகிறது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு
மொத்தம் 43 கிரகங்களில் இப்படி தண்ணீர் இருந்துள்ளது. அதாவது நாம் குடிக்கின்ற நிலையில் திரவமாக காணப்படவில்லை. மாறாக பாறைகளில் நீர் இருந்துள்ளது. இந்த பாறைகள் பாதி தண்ணீர், பாதி பாறைகள் கலந்து உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட வலிமை அதிகமாக இருக்கும் சுதை மணல் போல இந்த பாறைகள் இருப்பதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இந்த சுதைக்கு கீழே அதிக அளவில் தண்ணீர் இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

யுரோப்பா
முக்கியமாக வியாழன் கிரகத்தின் நிலவான யுரோப்பா நிலவில் கூட இதேபோல் பாறைகளில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பார்முலா, வெளியாகும் வாயுக்கள், தொலைநோக்கி புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து இந்த ஆராய்ச்சி முடிவுகளை கண்டுபிடித்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது கிரகங்கள் குறித்தும், வேற்று உலகங்கள் குறித்தும் நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றும் என்று ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications