தலையில் வீசப்பட்ட கத்தரிக்கோல்.. பதறிப்போன எழும்பூர் திமுக எம்எல்ஏ.. சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னை: சென்னையில் செயற்கை புல் தரை கால்பந்து மைதானத்தை எழும்பூர் திமுக எம்எல்ஏ பரந்தாமன் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் தலையில் கத்தரிக்கோல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை எழும்பூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பரந்தாமன். இவரது தொகுதிக்கு உட்பட்ட ரெங்காச்சாரி தெருவில் மாநகராட்சி மைதானம் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் செயற்கை புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எழும்பூர் எம்எல்ஏ சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் இந்த மைதானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் இன்று திறந்து வைத்தார். முதலில் அவர் செயற்கை புல்வெளி கால்பந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பிறகு மைதானத்தின் அருகே கல்வெட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.
கல்வெட்டை திறந்து வைத்தபோது திமுக எம்எல்ஏ பரந்தாமன் மீது அங்கிருந்தவர்கள் மலர்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது திடீரென்று கூட்டத்தில் பறந்து வந்த கத்தரிக்கோல் பரந்தாமனின் தலையில் பட்டு தெறித்து கீழே விழுந்தது. கத்தரிக்கோல் பட்டதையடுத்து பரந்தாமன் தலையை தொட்டு பார்த்தார்.
அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் அவர் அடையவில்லை. இதற்கிடையே கத்தரிக்கோலை எடுத்த அவரது ஆதரவாளர் யார் கத்தரிக்கோலை வீசினர்? என்று கேள்வி கேட்டார். யாரும் சொல்லவில்லை. இதையடுத்த அந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிட்டனர். கூட்டத்தில் எம்எல்ஏ பரந்தாமனை நோக்கி அங்கிருந்தவர்கள் மலர்களை தூவியபோது தெரியாமல் கையில் இருந்த கத்தரிக்கோல் அவரை நோக்கி வந்து விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே திமுக எம்எல்ஏ பரந்தாமன் தலையில் கத்தரிக்கோல் வீசப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications