Kathiri Veyil: மகா ஜனங்களே! கதற விடும் கத்திரி வெயில் இன்று தொடக்கம்! அக்னி தணிக்கும் வருண பகவான்!
சென்னை: தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் வரும் 28-ந் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். அதேநேரத்தில் கத்திரி வெயிலின் கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே பல பகுதிகளில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமான வெப்ப நிலை பதிவாகி வருகிறது. கடந்த இரு மாதங்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது. ஆனாலும் பல இடங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருவதால் இருவித காலநிலையும் நிலவுகிறது.

இந்த நிலையில் வெயிலின் உக்கிரமான காலமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த உக்கிரமான வெயில் காலம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்குமாம். இநத ஆண்டு 25 நாட்களுக்கு கத்திரி வெயில் கதகளி ஆடக் காத்திருக்கிறதாம்.
கத்திரி வெயிலின் முதல் 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். இந்த நாட்களில் வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக வெப்ப நிலை பதிவாகும். ஆகையால் கத்திரி வெயில் காலத்தில் பிற்பகல் நேரங்களில் வெளியே வீணாக அலைவதைத் தவிர்க்க வேண்டும்,
இருப்பினும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இந்த வாரம் மழைக்கு சாத்தியமான வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்கின்றது வானிலை ஆய்வு மையம்.. இதனால் கத்திரி வெயில் நம்மை கதறவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு தேவை இல்லையாம்.
அதற்காக கத்திரி வெயில்தானே.. கோடை மழையும் வரும்தானே.. ஒரு கை பார்ப்போம் என வீர சாகசங்களில் ஈடுபடாமல், இந்த வெயிலின் உக்கிரத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்
இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை பதிவாகும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications