சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியானது.. அமைச்சர் அன்பில் மகேஷ் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 8 லட்சம் மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியிடப்பட்டன.. நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்

Recommended Video

    12th Result-ல் திருப்தி இல்லையா? | Anbil Mahesh Poyyamozhi Announcement | Oneindia Tamil

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.

    அதற்கு பதிலாக, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் மார்க் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19ல் வெளியாகிறது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி தெரியுமா?தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19ல் வெளியாகிறது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி தெரியுமா?

    அறிவிப்பு

    அறிவிப்பு

    அதாவது, மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் தேர்வுத் துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டு வந்தன.

     இன்று வெளியீடு

    இன்று வெளியீடு

    இந்நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன.. அவைகளை வெப்சைட்டில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.. மேலும் திங்கட்கிழமை அதாவது இன்றையதினம் அந்த மார்க்குகள் வெளியிடப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.. அதற்கான வெப்சைட் அட்ரஸையும் நேற்று முன் தினம் அரசு தேர்வுத்துறை வெளியிட்டிருந்தது.

     முழு மதிப்பெண்கள்

    முழு மதிப்பெண்கள்

    அதன்படியே இன்று அந்த மார்க்குகள் வெளியாகின. இதில் என்ன ஒரு திருத்தம் என்றால், வழக்கமாக ஒவ்வொரு தேர்வு முடிவும் முழு மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டுதான் வழங்கப்படும்... ஆனால் இந்த முறை அப்படி கிடையாது.. எஸ்எஸ்எல்சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை கணக்கிடும்போது தசம அடிப்படையில் என்ன மார்க் வருகிறதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

     தேர்வு துறை

    தேர்வு துறை

    அதாவது, ஒரு மாணவரின் மார்க்கை கணக்கிடும்போது, 6 பாடப்பிரிவுகளில் 600 மதிப்பெண்ணுக்கு அந்த மாணவர் பெற்ற மொத்த கூட்டுத்தொகை மார்ரக்காக 520.76 என்று வந்தால், அந்த மார்க்கை முழுமையாக்காமல், அப்படியே தசம எண் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது.

     தரவரிசை பட்டியல்

    தரவரிசை பட்டியல்

    இது எதற்காகவென்றால், என்ஜினீயரிங் உள்பட சில உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் கட்-ஆப் மார்க்தான் பல வருஷமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது... அதன் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆனால், புதிய நடைமுறையான தசம எண் அடிப்படையில் வரும் மார்க்குகளை, கட்-ஆப் மதிப்பெண்ணாக கணக்கிடும்போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படைய மாட்டார்கள்.. ஒருகுழப்பமும் இல்லாமல் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அடித்தளமாக இருக்கும் என்று கல்வித்துறை நம்பப்படுகிறது.

    டவுன்லோடு

    டவுன்லோடு

    இன்று இணைய தளங்களில் தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். 22ம் தேதி முதல் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மார்க் ஷீட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    English summary
    Score list of Plus 2 students released today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X