தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைஃபஸ் என் அப்பா உயிரையே வாங்கிவிட்டது.. ஜாக்கிரதை.. நெட்டிசன் வார்னிங்
சென்னை: ஸ்க்ரப் டைஃபஸ் அல்லது புஷ் டைபஸ் என்ற புதிய பாக்டீரியா காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவி வருகிறது. இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர்.. இந்த நோய் காரணமாக தனது தந்தை மரணம் அடைந்துவிட்டார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்க்ரப் டைஃபஸ் அல்லது புஷ் டைபஸ் என்பது, 1930 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முதலில் பரவியது. 1930 ஆம் ஆண்டில் ஜப்பானில் Gram-negative α-proteobacterium என்ற பாக்டீரியா மூலம் பரவியது. ஒட்டுண்ணியான ஓரியன்டியா சுட்சுகாமுஷியால் ஏற்படும் ஒரு வகை டைபஸ் பாதிப்பு ஆகும் இது. உலகம் முழுக்க பல நாடுகளில் அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள் உங்களை கடித்தால் இது ஏற்படும். சில சமயங்களில் பூச்சிகள் கூட இதனால் பாதிக்கப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பூச்சிகள் கடிப்பதால் கூட உங்களுக்கு ஸ்கரப் டைபஸ் ஏற்படும். இந்தியாவிலேயே அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திடீரென தற்போது ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சமீபத்திய மழை மற்றும் குளிர்ந்த வெப்பநிலையைத் தொடர்ந்து RSV மற்றும் Covid-19 உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக சென்னை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கான வார்டுகள் கிட்டத்தட்ட 80% நிரம்பியுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் திடீரென தற்போது ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு,
சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் சுவை இழப்பு, வாசனை இழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிலர்க்கு உடலில் தடிப்புகள் , வீக்கம் கூட ஏற்படலாம்.

எச்சரிக்கை: இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர்.. இந்த நோய் காரணமாக தனது தந்தை மரணம் அடைந்துவிட்டார். இது குணப்படுத்த கூடிய ஒன்றுதான். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயில் இருந்து குணமடையலாம் என்று நெட்டிசன் ஒருவர் போஸ்ட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் பரவி வருகிறது. பொதுவாக மழை காலத்தில் பூச்சிகள் வரும். இந்த பூச்சிகள் காரணமாக நோய் பரவும். அது உங்களை கடித்தால் இந்த நோய் பரவும். முக்கியமாக மலை பக்கங்களில் இருப்பவர்களுக்கு இந்த பூச்சிகள் காரணமாக நோய் பரவலாம்.
முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் சில நாட்களுக்கு காலத்திற்கு நீடிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications