அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ.? டார்கெட் சிறுபான்மையினர் ஓட்டு! எடப்பாடி எடுக்கும் புது அஸ்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியை வலிமைப்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த தேர்தல்களில் இழந்த சிறுபான்மையினர் சமுதாய வாக்குகளை மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வருவதற்கான வியூகங்களை வகுத்து அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறார். இதனால் தான் முதற்கட்டமாக மஜக, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

SDPI in AIADMK alliance? Edappadi palanisamy Target minorities votes

எஸ்.டி.பி.ஐ. கட்சியை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் ஓரளவு பரவலாக கட்டமைப்புள்ள கட்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம் லீக் உள்ளிட்ட ஏனைய இஸ்லாமிய கட்சிகளை காட்டிலும் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாகவும் கருதப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கதவு அடைக்கப்பட்டதால் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது எஸ்.டி.பி.ஐ.

இதனிடையே பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதை வரவேற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி, இந்த முடிவில் ஜெயலலிதாவை போல் எடப்பாடி பழனிசாமி கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் அதிமுகவுடன் எஸ்.டி.பி.ஐ.கூட்டணி சேரவும் வாய்ப்பிருக்கிறது. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ.யிடம் நிபந்தனையற்ற ஆதரவை பெற்றுக்கொண்டு அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் ஓரிரு தொகுதிகள் கொடுப்பது பற்றியும் அதிமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய இரு பெரும் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளதை போல் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய இரு அமைப்புகளும் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது.

இதேபோல் கிறிஸ்துவர்கள் வாக்குகளை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வருவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இருந்தவாறே அதிமுக தலைமையிலான கூட்டணியை தமிழகத்தில் வலிமைப்படுத்தும் பணிகளை கவனித்துக் கொள்கிறார்.

இதுவரை அதிமுக கூட்டணி தொடர்பாக அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாவிட்டாலும் திரை மறைவு பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டுத் தான் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+