சென்னையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய எஸ்டிபிஐ! 100க்கும் அதிகமானோர் கைது
சென்னை: ஹமாஸ் படையினர் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதலை பல்வேறு நாடுகளும் கண்டித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்த அளவில் மத்திய அரசு இஸ்ரேலுடன் இருப்பதாக கூறினாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாலஸ்தீனம் பக்கம் இருப்பதாக கூறியுள்ளன. அதேபோல தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ கட்சியும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்திலும் ஈடுபட்டது. இதில்,

"பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு கண்டிக்கத்தக்கது. பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும்" என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, தெற்கு மாவட்டத் தலைவர் வழ.முகமது உசேன், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் புஷ்பராஜ், மேற்கு மாவட்டத் தலைவர் சீனி முகமது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அகமது, மேற்கு மாவட்டத் தலைவர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications