Peddi movie OTT: பெத்தி படம் பார்த்து பேதி பிடுங்கியதுதான் மிச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புச்சி பாபு சனா இயக்கி, ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பெத்தி' (Peddi) தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூரை கவர்ச்சியாக காட்டுவதாக எழுந்த விமர்சனங்களையடுத்து அதில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதால் அட்லீஸ்ட் சதைக்கு பதில் கதையாவது இருக்குமா என நினைத்து பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான்.

மலைகிராமத்தில் பிறந்ததால் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பெத்தி கதாப்பாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளார். நிஜத்தை இன்ஸ்பையராக வைத்து எடுத்த படம்தான். ஆனால் அவரது விளையாட்டு பயணத்தை தொடராமல் ஜான்வி கபூர் சேலையை அவிழ்த்து வயல் காட்டுக்கு தீ வைக்கும் காட்சி, முத்தக் காட்சி என கதையோட்டம் வீணடிக்கப்பட்டு ஆரம்பத்திலேயே கொட்டாவி எட்டிப் பார்க்கிறது. சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்றுக்கொள்ள போகும் காட்சிகளும் அவர் எப்படி கற்றுக் கொடுக்கிறார் என்ற காட்சிகளும் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கான அம்சங்களோடு அமைந்துள்ளன. அதை தவிர மற்ற அனைத்துமே செயற்கை செயற்கை மட்டுமே. காட்சியமைப்பு இடங்களும் செட் போட்ட மாதிரி அப்பட்டமாக தெரிகிறது.

Peddi movie

எங்கெங்கோ சுற்றும் கதை, கடைசி 10 நிமிடங்களுக்கு நிலைக்கு வந்து நிற்கிறது. பாராட்ட வேண்டிய நல்ல கதை கருதானே, இதை ஏன் இவ்வளவு நேரம் மிஸ் செய்துவிட்டு பைபாசில் இயக்குநர் சுற்றி திரிந்தார் என கடுப்புதான் தோன்றுகிறது கிளைமேக்ஸ் பார்த்த பிறகு. படத்தில் 1 மணி நேரத்தை வெட்டி எறிந்திருந்தால், இது ஒரு மாஸ்டர் கிளாசாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெகா சொதப்பலாக எஞ்சி நிற்பது கொடூரம்.

பைசன் திரைப்படமும் ஸ்போர்ட்ஸ் பற்றி பேசுவதுதான். ஜாதி அடக்குமுறையையும் பேசுவதுதான். ஆனால், ஹீரோயின் வரும் காட்சிகளை வெட்டி விட்டால் அது ஒரு பதற்றத்தோடு வைத்திருக்கும். மிக மிக இயல்பாக, நடைமுறைக்கு ஒட்டும் காட்சியமைப்போடு இருக்கும். ஆனால் அதை ஒரு தராசில் வைத்து பெத்தியை ஒரு தராசில் வைத்தால், பார்ப்பவர்களுக்கு பேதி பிடுங்குவதுதான் மிச்சம்.

கொசுரு தகவல்- பெத்தி கிரிக்கெட் விளையாடும் ஸீனை பார்க்காமல் இருப்பது உங்கள் கிட்னிக்கு நல்லது. லப்பர் பந்து படம் எடுக்கும் தமிழ் இயக்குநர்கள் எங்கே, கிரி்க்கெட்டையே கொன்று புதைத்த தெலுங்கு இயக்குநர்கள் எங்கே என்ற கேள்விதான் காதில் எதிரொலிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+