திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல்
சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிட 3 இடங்களை கேட்டுள்ளோம் என்றும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக எந்த நிர்பந்தத்தையும் எந்த கட்சிக்கும் கொடுக்கவில்லை என்றும் தாங்களாகவே அப்படிச் சொன்னதாகவும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகளான முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு இன்னும் சீட் பங்கீடு இறுதியாகவில்லை.

இந்நிலையில் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை முபாரக், "திமுக கூட்டணியில் எங்களது கட்சிக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 3 தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுள்ளோம். எண்ணிக்கையை தீர்மானித்த பின்னர், தொகுதி என்ன என்பதை திமுக குழுவுடன் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் மாபெரும் வெற்றியை மே 4 ஆம் தேதி திமுக கூட்டணி பெறும். 2 அல்லது 3 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த முழு விவரத்தை அறிவிப்போம். நான் போட்டியிடுவது உள்ளிட்ட எந்த விஷயத்தையும் தீர்மானிக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என நாங்களாக தான் சொல்லி உள்ளோம்.
எங்கள் செயற்குழு கூடி முடிவெடுத்து இந்த முடிவை சொல்லி உள்ளோம். எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நிர்பந்தத்தையும் திமுக கொடுக்கவில்லை. கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் அவ்வாறு திமுக நிர்பந்தத்தை கொடுக்கவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் இப்போது இருப்பதைப்போல், தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். டெல்லி உத்தரவின் பேரில் அதிமுக முடிவுகளை எடுக்கிறது என்பதை தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.
நாங்கள்தான் கூட்டணியின் தலைவர் என அதிமுக சொல்லும் நிலையில், இடங்களை பெறுவதற்கு டெல்லியில் 2 மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. அதிமுக கூட்டணியை காத்துக் கிடந்துதான் இறுதி செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானமாக நாங்கள் கருதுகிறோம்.
திமுக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. இது வெற்றிக் கூட்டணி. ஒவ்வொருவரும் பரஸ்பரமாக அவர்களது உரிமை குறித்து கேட்கத்தான் செய்வார்கள். சகோதர மனப்பான்மையுடன் திமுக பேசி தீர்க்கிறது. தேர்தலுக்கு இன்னும் அதிகமாக நேரம் உள்ளது. எங்கள் கூட்டணியில் குழப்பம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தான் தவறாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி செயல்படுகிறது.
விஜய் வந்தால் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார் என மக்கள் நினைத்தார்கள். ஆனால், சாதாரண மக்கள் கூட அவர் மீது நம்பிக்கையை தற்போது இழந்து விட்டார்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையில்கூட குரல் எழுப்ப முடியாதவர், மக்களுக்கான பிரச்சனையில் எப்படி குரல் எழுப்புவார்?
விஜய்யின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும் சந்தேகத்தையும் சஸ்பென்ஸையும் எழுப்புகிறது. இப்தார் நோன்பில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுகிறார். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனமாக இருந்தார்" என்று விமர்சித்துள்ளார்.
-
இது தான் தவெகவின் அஜெண்டா.. விஜய் தரப்பு வெளியிட்ட ஏழு முக்கிய திட்டங்கள் -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள்












Click it and Unblock the Notifications