தேசிய குடிமக்கள் பதிவேடு... மத்திய அரசு நயவஞ்சகமாக நடக்கிறது... எஸ்.டி.பி.ஐ. சாடல்..!
சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் மத்திய அரசு நயவஞ்சகமாக நடந்துகொள்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புதிய படிவத்தில் வழக்கத்திற்கு மாறான கேள்விகள் இடம்பெற்றிருப்பதால் தமிழக அரசு இதை நிராகரிக்க வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியிருப்பதாவது;

உள்நோக்கம்
ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான இத்தகைய தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.

எதிர்ப்புகள்
கடந்த ஆண்டு எழுந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் மீண்டும் தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை தொடர்பான கேள்விகள் அடங்கிய படிவத்தையே மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் என்பிஆர் குறித்து ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளும், அதோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெற்றோர் பிறப்பு குறித்து கூடுதலாக கேட்கப்படும் கேள்விகளும் மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

என்.பி.ஆர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (என்.பி.ஆர்.) புதிப்பிக்கப்படுவதன் உள்நோக்கம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மறைமுகமாக அமல்படுத்துவதே அல்லாமல் வேறு எதுவுமில்லை என்பதுவும் தெளிவாகிறது. ஆகவே, வழக்கத்துக்கு மாறாக கேள்விகளை கொண்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்.

நிராகரிக்கவும்
மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையின் பின்னால், என்.ஆர்.சி. மற்றும் சிஏஏ சட்டங்களை அமல்படுத்தும் நயவஞ்சக திட்டமும் உள்ளடங்கியுள்ளதாக தெரிகிறது. ஆகவே ஒன்றிய அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications