ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட்
சென்னை: வெளியில் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போல் இருந்தாலும் திமுக கூட்டணியில் அடிதடி நடக்காத குறை தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி என ஒதுக்கிவிட்டு, பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் மதிமுக, கம்யூனிட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி பங்கிட்டை குறைக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் பொதுவெளியில் போர்க் குரலை எழுப்பி இருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விரைவில் பஞ்சாயத்தை தொடங்கலாம் என்கின்றனர்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது அனைத்து கட்சிகளுக்கும் லட்சியம் என்றாலும் 2026 சட்டமன்ற தேர்தல் பலரது அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம் நான்கு முனை போட்டியாக 2026 சட்டமன்ற தேர்தல் வந்திருக்கிறது.
இந்த நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றனர். இதுவரையிலான தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு முறை திமுக வென்றதில்லை என்ற மோசமான சாதனையை உடைக்க மு க ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தல்
அதேபோல அடுத்தடுத்து இரு தேர்தல்களில் தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும் 10 தோல்வி பழனிச்சாமி என்ற விமர்சனத்தை தவிடு பொடியாக்கும் வகையில் 11 வது தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசி வரும் நிலையில் கடந்த தேர்தலில் 4 எம்எல்ஏக்களை பெற்ற பாஜக இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் ஆவது பங்கு பெற்று விட வேண்டும் என முயற்சித்து வருகிறது.
பாஜக கூட்டணி
மறுபுறம் வழக்கம் போல் தனித்து தான் போட்டி என களத்தில் இறங்கி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் களத்தில் இறங்கி இருக்கும் விஜய் இந்த தேர்தலில் வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார். இப்படி பலரது அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற விவாதம் ஒரு புறம் இருக்கிறது.
திமுக கூட்டணி சிக்கல்
மறுபுறம் மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் சில அரசியல் கட்சிகள் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. வெளிப்படையாகவே சில கட்சிகள் போர்க் குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றன. 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைந்த திமுக கூட்டணி தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து வருகிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பழைய கட்சிகளோடு தேமுதிக, மக்கள் நீதி மய்யம் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்ட புது வரவுகளும் இருக்கிறது.
கூட்டணிக்குள் குழப்பம்
170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக திட்டமிட்டு இருந்தாலும் புதிய கட்சிகளின் வரலாறு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டி இருக்கிறது. இதனால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கான தொகுதி பங்கிட்டை குறைப்பதோடு திமுக சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதுதான் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாநிலங்களவை சீட்டு வழங்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள்
புதிதாக கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு 6 முதல் 8 சட்டமன்ற தொகுதிகளும் வழங்கப்படலாம் என சொல்லப்படுவதோடு மக்களவை சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டணிலிருந்து மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மூன்றில் உதயசூரியன், ஒன்றில் தனிச்சின்னம் என தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஒத்த சீட்டு அதிமுக என்ற விமர்சனம் வைகோ மீது முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆகியவற்றிற்கும் கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
திருமாவளவன்
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் எங்களுக்கு குறைவான சீட்டுகளா என வெளிப்படையாக பேசத் தொடங்கி விட்டனர். விசிகவுக்கும் கடந்த தேர்தலை விட சீட்டுகளை குறைத்து நான்கு முதல் ஐந்து தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதனால் திருமாவளவனும் அதிருப்தியில் இருக்கிறார். வெளிப்படையாக திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் கூட்டணிக்குள் அதிருப்தி குரல் என தொடங்கி இருப்பது திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தர்மபுரி முதல் பெரம்பூர் வரை! பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட்













Click it and Unblock the Notifications