மொத்த காசும் காணாம போயிடும்! டிஜிட்டல் தங்கம்.. வலைவிரிக்கும் ஆப்கள்! செபி கொடுத்த வார்னிங்! கவனம்!
சென்னை: கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை அக்டோபர் இறுதி வாரத்தில் திடீரென சரிந்தது. தற்போது லேசாக உயர்ந்து வரும் நிலையில் தங்கத்தை வாங்குவதை விட ETF தங்க பத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்பாக முதலீட்டாளர்கள் யோசித்து வருகின்றனர். இந்த நிலையில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் ஆன செபி (SEBI) அறிவுறுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகச் சீராக இல்லாமல், ஏற்றம் மற்றும் இறக்கம் என மாறி மாறி பயணித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார நிலைமைகள், டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் போக்குகள் போன்ற பல காரணிகள் இதற்கு காரணமாக உள்ளன.

கடந்த மாதம் (அக்டோபர்) நடுப்பகுதியில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக அக்டோபர் 17ஆம் தேதி, தங்கம் விலை திடீரென அதிகரித்து, முதலீட்டாளர்களையும் நகைக் விற்பனையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தங்க சந்தை
ஆனால் சில நாட்களில் சந்தை நிலைமை மாறி, விலை குறையத் தொடங்கியது.
அக்டோபர் 22ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. அதன்பின் அக்டோபர் 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 சரிந்தது. இதனால் தங்கம் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்குக் கீழ் விற்பனையாகியது. இது கடந்த சில மாதங்களில் மிகக் குறைந்த விலையாகப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் மாறி மாறி நிகழ்ந்து வருகிறது. சில நாட்களில் ரூ.90 ஆயிரம் மீறி விலை உயரும் நிலையில், மறுநாள் அதே விலை மீண்டும் குறையும் தன்மை காணப்படுகிறது.
தங்க முதலீடு
இந்த மாறுபாடு, தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும், திருமண நகை வாங்க திட்டமிடுவோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபமாக சில நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சில ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கின்றன.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆன்லைன் வணிகத்தளங்கள், பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மூலமாக இந்த டிஜிட்டல் தங்கம் விற்கப்படுகிறது. இந்தநிலையில் டிஜிட்டல் தங்கம் முதலீடு தொடர்பாக இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வரியம் (செபி) நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
செபி எச்சரிக்கை
அதில், டிஜிட்டல் தங்கம் முதலீட்டில் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், "ஈ.டி.எப். தங்க பத்திரங்கள், பரஸ்பர நிதி முதலீடுகள் (மியூச்சுவல் பண்டுகள்) போன்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மூலம் முதலீடு செய்யப்படும் தங்கத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.
மியூச்சுவல் பண்ட்
சில ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கின்றன. இவை வழக்கமான தங்கத்திற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளும் கிடையாது" என கூறப்பட்டுள்ளது.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications