5-வது நாளாக உண்ணாவிரதம்.. அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும்- ஆசிரியர்கள் சங்கம்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் சுமார் 4,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த போராட்டத்தில் நேற்று வரை சுமார் 180 பேர் உடல்நலம் பாதிப்படைந்து உள்ளனர். இந்த நிலையில் தான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 பிரிவு ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சவுந்தர் தயாளன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 3 பிரிவு ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது.

எனினும், பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவாக தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறியிருக்கிறார்.
உங்களின் கோரிக்கைகளை முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவாக முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். நல்ல அறிவிப்பு வந்தால் போராட்டம் வாபஸ் பெறும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெறத்தயார். அதுவரை போராட்டம் தொடரும்" என்றார். அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று டெட் முடித்த ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் வடிவேல் சுந்தர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications