எங்கும் 6; எதிலும் 6; அ.தி.மு.கவின் 6-ம் எண் ரகசியம்...ஆட்சியாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா!
சென்னை: இந்த சட்டமன்ற தேர்தல் பணிகளில் அதிமுக 6-ம் எண்ணை மையமாக வைத்தே சில பணிகளை செய்து முடித்துள்ளது.
அதிமுகவின் தொகுதிகள் 177 ஆகும். 1+7+7 = 15; 1+5= 6 அதாவது இந்த 177-ன் கூட்டுத்தொகையும் 6 ஆகும்.
அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மாலை 6 மணியை மையப்படுத்தியே நடந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயிலலிதா போலவே ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இந்த ராசி நடைமுறையை
பின்பற்றி வருகின்றனர்

அதிமுக வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகலாம். அதிமுகவை பொறுத்தவரை முதற்கட்டமாக முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.

27 அமைச்சர்களுக்கு வாய்ப்பு
நேற்று 2-வது கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. இது தவிர பாமக, பாஜக தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டது. அதிமுகவில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்தம் 177 தொகுதிகளில் 15 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, பாஸ்கரன், நிலோபர் கபீல் ஆகியோரைத் தவிர 27 சிட்டிங் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் 6-ம் எண் ரகசியம்
அதிமுக அடுத்தக்கட்டமாக தேர்தல் அறிக்கை, பிரசாரம் என்று ரெடியாகி கொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்த சட்டமன்ற தேர்தல் பணிகளில் அதிமுக 6-ம் எண்ணை மையாக வைத்தே சில பணிகளை செய்து முடித்துள்ளது. அதாவது அதிமுக முதற்கட்டமாக 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 2-வது கட்டமாக 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

எங்கும் 6; எதிலும் 6
இரண்டும் சேர்த்து 177 தொகுதிகள் ஆகும். 1+7+7 = 15; 1+5= 6 அதாவது இந்த 177-ன் கூட்டுத்தொகையும் 6 ஆகும். அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மாலை 6 மணியை மையப்படுத்தியே நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கூட, முதல்வர், துணை முதல்வர், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகிய 6 பேர்தான் பங்கேற்றனர்.

தேர்தல் தேதியும் 6 தான்
இவ்வாறு பல்வேறு தேர்தல் பணிகளையும் அதிமுக 6-ம் எண்ணை மையப்படுத்தியே செய்து வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் கூட 6-ம் தேதி என்பதால், அதிமுகவினர் 6-ம் எண்ணை மிகவும் ராசியாக கருதி வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் ராசி பார்ப்பவர் ஆவார். அவருக்கு ராசியான ஒரு குறிப்பிட்ட எண்ணை வைத்தே அவர் பல பணிகளை செய்வார். தற்போது ஜெயலலிதா ஆட்சியை பின்பற்றி வரும், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இந்த ராசி நடைமுறையிலும் ஜெயலலிதாவையே பின்பற்றி வருகின்றனர். இந்த 6-ம் எண் ராசி அதிமுகவுக்கு கைகொடுத்து அவர்களை ஹாட்ரிக் வெற்றி பெற வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications