செக்யூரிட்டி வேலைக்குக்கூட அட்ஜஸ்ட்மென்ட்? சென்னையில் பெண்ணுக்கு வந்த மெசேஜ்.. அங்கேதான் ஒரு ஹைலைட்
சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிப் போகும் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பதாக அடிக்கடி புகார்கள் வருவதை பார்த்திருப்போம்.. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற ஒரு சாதாரண வேலைக்கு செல்லும் பெண்ணிடம்கூட இப்படியொரு கோரிக்கையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது சென்னையில் நடந்துள்ள இந்தச் சம்பவம். என்ன நடந்தது?
சென்னையில் வேலை கிடைப்பதே சில நேரங்களில் பெரிய போராட்டமாக இருக்கிறது. அதிலும் குடும்பச் சூழ்நிலை காரணமாக வருமானம் இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலை இருக்கும். அப்படித்தான் திருவான்மியூரைச் சேர்ந்த 40 வயது லதா என்ற பெண்ணும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை தேடி அலைந்துள்ளார்.

சென்னை செக்யூரிட்டி வேலை
பல இடங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்காததால், தெரிந்தவர் சொன்ன ஆலோசனையின்படி செல்போனில் OLX ஆப்பில் வேலை தேடியிருக்கிறார் லதா. அப்போது திருவான்மியூரில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் பெண்களுக்கு செக்யூரிட்டி வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இதைப் பார்த்ததும், கொடுக்கப்பட்டிருந்த நம்பருக்கு போன் செய்திருக்கிறார்.
அந்தப் போனை எடுத்துப் பேசியவர் ராஜா. வேலை பற்றி போனிலேயே முழு விவரத்தையும் சொல்லாமல், "நேரில் வந்து மீட் பண்ணுங்கள், அப்புறம் பேசலாம்" என்ற ரீதியில் கூறியிருக்கிறார். வேலை கிடைக்குமோ என்ற நம்பிக்கையில் லதாவும் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். வேலை பற்றிப் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் பேசிய ராஜா
உடனே வேலைக்காகப் பேசிய ராஜாவிடமிருந்து லதாவுக்கு போன் வந்தது.. "வேலை வாங்கித் தர வேண்டுமானால் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும், இதுக்கு ஓகே என்றால் மட்டும் சொல்" என்று மெசேஜ் அனுப்பினாராம்.. வேலைக்காக அணுகிய பெண்ணிடம் இப்படியொரு கண்டிஷனா என்று அதிர்ச்சியைடைந்தார் லதா.
உடனடியாக திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜா (43) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அங்கேதான் ஒரு ஹைலைட்
இதில் ஹைலைட் என்னவென்றால், செக்யூரிட்டி வேலை வாங்கி தருவதாக சொன்ன இந்த ராஜா, கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் இதே செக்யூரிட்டி வேலையில் சேர்ந்தாராம்.. இப்போது வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மோசடியிலும் ஈடுபட்டுள்ளது வியப்பை தந்துள்ளது..
வேலை தேடுபவர்களின் தேவையையும், குடும்பச் சூழ்நிலையையும் பயன்படுத்திக்கொண்டு இப்படித் தவறான நிபந்தனைகளை முன்வைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.. வேலை தேடிச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது...!!


Click it and Unblock the Notifications
