சர்வதேச நீதிமன்றம் அழியுது! தமிழ் வம்சாவளிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன்.. டிரம்ப் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன்னாள் நீதிபதியும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளியுமான நெவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இதனால் ICC அழியும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

ஒவ்வொரு வருஷமும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்தான். அதிலும் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். நான்தான் உலகத்தை காக்க வந்த ரட்சகர். எனவே எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்க.. என்று டிரம்ப் வெளிப்படையாகவே வாயை திறந்து கேட்டிருந்தார்.

Nobel

ஆனால், கடந்த ஆண்டும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டும் கொடுக்கப்படவில்லை. இப்படியான கோபம் ஒரு பக்கம் இருக்க.. மறுபுறம், ICC முன்னாள் நீதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது, டிரம்பை செம டென்ஷனாக்கியது. அவரை பொறுத்தவரை ICC என்பது சமூக விரோத அமைப்பு, தடை செய்ய வேண்டிய அமைப்பு. இதற்கு முன்னர் இந்த அமைப்பைப்பற்றி ஆயிரத்தெட்டு குறை சொல்லியிருக்கிறார். நான் இவ்வளவு சொல்லியும், அந்த அமைப்பின் முன்னாள் நீதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது எனில்.. என் பேச்சுக்கு என்ன மரியாதை? என்று டிரம்ப் சூடாகிவிட்டார்.

எனவே ICC அமைப்புக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். இந்த தடை காரணமாக இனி அமெரிக்க நிறுவனங்களை இந்த அமைப்பு பயன்படுத்த முடியாது. உதாரணத்திற்கு ICC கம்யூட்டர்களில் மைக்ரோசாப்ட் இருக்கிறது. மைக்ரோசாப்ட் என்பது அமெரிக்க நிறுவனம்.. எனவே இனி ICC தனது கம்ப்யூட்டர்களில் மைக்ரோசாப்ட் சேவையை பயன்படுத்த முடியாது. அமெரிக்காவின் தடை காரணமாக சர்வதேச வங்கிகள் ICC-ன் கணக்குகளை முடக்கலாம்.

இப்படி நிதியையும், தொழில்நுட்பத்தையும் முடக்குவதால் உக்ரைன் மற்றும் காசாவில் நடந்து வரும் போர் குற்ற விசாரணைகள் முற்றிலுமாக நின்று போகலாம். அல்லது நீதிமன்றமே அழியும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று பலரும் எச்சரித்துள்ளனர்.

அதைவிட முக்கியமான விஷயம், பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபர் ரோட்ரிகொ துதெர்தே போன்ற சர்வீதேச குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைணை நிதிப்பற்றாக்குறையால் நியாயமான முறையில் நடத்த முடியாமல் போனால், சட்டப்படி அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பதுதான். எனவே டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக உறுப்பு நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று ICC கேட்டுக்கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+