தூரம் நில்லுங்கள்.. டெல்லி போராட்டத்தில் ஏதோ பெருசா நடக்கப்போகுது? பத்திரிகையாளருக்கு போலீஸ் தந்த அட்வைஸ்
டெல்லி: இன்று காலை முதல் டெல்லி பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்பட்டு வருகிறது. திரும்பும் திசையெங்கும் போலீசார், துணை ராணுவம், அதிவிரைவு படையினர் குவிக்கப்ட்டுள்ளனர். இந்நிலையில் தான் ''டெல்லி போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டக்கார்களின் மத்தியில் நின்று செய்தி சேகரிக்கவோ அல்லது போராட்டக்காரர்களின் கூட்டத்துக்குள் நுழையவோ வேண்டாம். தூரமாகவே நிற்க வேண்டும்'' என்று மீண்டும் மீண்டும் போலீசார் அறிவுரை வழங்கி வருவதால் ஏதோ பெரிய சம்பவம் நடைபெற உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ரெடியாகி உள்ளனர்.
இவர்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை டெல்லி போலீசார் எடுத்துள்ளனர். மத்திய அரசும், டெல்லி போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். டெல்லி எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. டெல்லிக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரை சுற்றி 4 கிலோமீட்டர் சுற்றளவில் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் டெல்லி போலீசார், அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு இன்று முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி,'' டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் தூரமாக நிற்க வேண்டும். போராட்டக்காரர்கள் மத்தியில் நின்று செய்தி சேகரிக்கவோ அல்லது போராட்டக்காரர்களின் கூட்டத்திற்குள் நுழையவோ வேண்டாம்.
காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தூரத்தில் நன்றே ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும்'' என்று தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக போராட்டங்களின்போது இத்தகைய அறிவிப்புகளை போலீசார் வெளியிடுவது இல்லை. போராட்டம் நடக்கும் இடத்திலேயே பத்திரிகையாளர்கள் சென்று செய்தி சேகரிப்பார்கள்.
ஆனால் டெல்லியில் இன்று நடக்கும் போராட்டத்தில் போலீசார் மீண்டும் மீண்டும் பத்திரிகையாளர்களை தூரம் நிற்கும்படி கூறி வருகின்றனர். இதனால் ஏதோ பெரிய சம்பவம் நடைபெற உள்ளதா? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ, இது பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையாகும்.
டெல்லியில் இன்று போராட்டம் நடத்த போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் போராட்டக்காரர்கள் டெல்லியை நோக்கி சென்று தடையை மீறி போராட்டம் நடத்த தயாராகி வருவதால் நிலைமை கைமீறி சென்றால் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசும் நிலை வரலாம். இதில் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி வழியாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டெல்லியில் இன்று நடக்கும் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் இளைஞர்கள் போராட்டத்தில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தையொட்டி டெல்லியில் மொத்தம் 35 ஆயிரம் போலீசார், 125 கம்பெனி துணை ராணுவ படையினர், அதி விரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் யூனிபார்மில் கேமரா பொருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் மொத்தத்தில் இன்று காலை முதல் டெல்லி பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.




Click it and Unblock the Notifications
