நாய்கள்.. ஊழல் செய்வதற்கு பதில் தெரு தெருவாக போய் பிச்சை எடுக்கலாம்! விளாசிய ஹைகோர்ட் நீதிபதிகள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆதிதிராவிடர் மாணவர்கள் நலநிதியில் பல கோடி மோசடி விசாரணையை சிபிசிஐடி மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற போது, மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்டத்தில் ஊழல் செய்வதற்கு பதிலாக தெருத்தெருவாக பிச்சை எடுக்கலாம் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். மேலும், ஊழல் செய்த அதிகாரிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைக்கலாமா என கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்கின் நிலை என்ன விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court Corruption cbcid

சிவகங்கை மாவட்டம் பாத்திரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் தாக்கல் செய்த மனுவில்," சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி 35 லட்சம் நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளது. 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகை மாணவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல், இதன் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதில் ஈடுபட்டதாக கூறப்படும் தாசில்தார்களில் பலர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒரு சிலர் பணி ஓய்வு பெற மாவட்ட ஆட்சியர்கள் அனுமதித்து உள்ளனர். இது சட்டவிரோதம்.

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது எனவே அரசின் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறது எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் குற்றப்பத்திரிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்பொழுது கோபமடைந்த நீதிபதிகள் எப்பொழுது ஊழல் செய்ததற்கு, எப்போது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பணத்தில் ஊழல் செய்வதற்கு பிச்சை எடுக்கலாம் இந்த பொழப்பு அதிகாரிகளுக்கு தேவையா? அரசு பணத்தில் மாணவனுக்கு கொடுக்கும் உதவி திட்டத்தில் ஊழல் செய்வதற்கு பதில் தெரு தெருவாக பிச்சை எடுக்கலாம். இது போன்ற நாய்களை ஏன் வைத்துள்ளார்கள். ஊழல் செய்தவனுக்கு மக்கள் வரி பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஆதரவாக பேசுகிறீர்கள்.

இது போன்ற ஆட்களை வைத்து தான் அரசு நடத்தபட்டு வருகிறது. என்ன கடும் கோபமாக பேசிய நீதிபதிகள் நீதிபதி இது போன்று வார்த்தைகளை பேசினார் என சொல்லிக் கொள்ளுங்கள் என்றார். அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாங்கள் 3 மாத குழந்தை கொஞ்சம் பொருத்திருந்து பாருங்கள் என்றனர்
அப்பொழுது நீதிபதிகள், ஆட்சி மாறலாம் ஆனால் அரசு அதிகாரிகள் அப்படியதானே இருக்கிறார்கள்.99% அதிகாரிகள் ஊழல் செய்யக் கூடியவர்களாகவே தான் இருக்கிறார்கள்.

இங்கே நாங்கள் எந்த அரசையும் பிள்ளை அடல் வரக்கூடிய அரசுகள் ஊழல் அதிகாரிகளை தான் பாதுகாக்க முயற்சிக்கிறது என்றார்கள், மேலும், படித்து முடித்தவுடன் இந்த துறைதான், வேண்டும் என்று வருபவனை என்ன செய்ய முடியும் அவன் பணம் கொடுத்து வந்தால் ஊழல் செய்ய தான் செய்வான். என கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்?

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.?, எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்கின் நிலை என்ன? எத்தனை வழக்கு மீது விசாரனை அதிகாரிகள் நியமனம் செய்ய பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+