அஜித் குமார் எப்படியெல்லாம் டூர் போயிருக்காருன்னு பாருங்க.. சுரேஷ் சந்திரா சொன்ன குட்நியூஸ்
சென்னை: நடிகர் அஜித்தின் உலக பயணம் அடுத்த கட்டமாக வரும் நவம்பர் 2023ல் தொடங்கும் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அஜித் நேபாளத்தில் சுற்றுப்பயணம் செய்த வீடியோக்கள் புகைப்படங்களை வெளியானது.இந்நிலையில் அஜித்தின் உலகப் பயணம் தற்போது படப்பிடிப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார், பயணம் செய்வதில் அலாதி பிரியம் உள்ளவர். அஜித் குமார் தனது இருசக்கர வாகனத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார். லடாக், சிக்கிம், சூரத், மும்பை, புனே, கவுகாத்தி என இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்குமே இருசக்கர வாகனத்தில் நடிகர் அஜித் குமார் பயணம் செய்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் பயணத்தை பலரும் புகைப்படம் எடுத்து வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார்கள். மிக கடினமான கால நிலைகளில் கூட அஜித் பயணம் செய்துள்ளார்.குறிப்பாக நேபாளத்தில் அஜித் குமாரின் பயணம் பெரிய அளவில் பேசப்படுகிறது.கடுமையான நிலப்பரப்பு உடைய அந்த மாநிலத்தில் அஜித் பயணம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில அஜித் குமார் புதிதாக "விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் தனது உலக சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் விடா முயற்சி படத்தை மீகாமன், தடம் உள்பட நான்கு படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இதனிடையே நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்தின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த மேப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அஜித்தின் பயணம் குறித்தும் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், "தனது சுற்றுப்பயணத்தில் சவாலான நிலப்பரப்புகளில் பயணம் செய்து மிக கடுமையான காலநிலைகளை அஜித் எதிர்கொண்டார். அஜித் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்துள்ளார், நேபாளம் மற்றும் பூடானையும் கடந்து சென்றுள்ளார. அஜித்தின் உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் நவம்பர் 2023 இல் தொடங்கும்" இவ்வாறு சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications