விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு.. டிவியில் கண்ணை மூடாமல்.. யார் கவனிக்கிறாங்கன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது. மக்கள் இப்போதே கூட்டம் கூட்டமாக வர தொடங்கியுள்ளனர்.

தவெக மாநாடு குறித்த செய்திகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளார். நேற்று மாநாடு குறித்த செய்திகளை அவர் தீவிரமாக டிவியில் பார்த்துள்ளார். நடிகர் விஜய்.. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கம்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

புஸ்சி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர்தான். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். 2006 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்சி சட்டமன்றத் தொகுதியில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கம்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பங்கு மிக அதிகம். இதன் காரணமாகவே தவெக மாநாடு குறித்த செய்திகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளார். தவெகவின் மாநாட்டில் கட்சியின் கொடி ஏற்றிய பின் உறுதிமொழி மேற்கொள்ளப்பட உள்ளது. விஜய் கொடி ஏற்றியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பின்வரும் உறுதி மொழியை படிக்க உள்ளனர்.

அதன்படி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியே கூறப்பட்டு உள்ளது.

திமுக அதிகம் பயன்படுத்தும் சமூக நீதி என்ற வார்த்தையை தனது உறுதிமொழியில் விஜய் இணைத்துள்ளார்.

விஜய் கோரிக்கை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டிற்கு நடிகர் விஜய் விடுத்துள்ள அழைப்பில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.

பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+