சீமானின் உண்மையான வருமானம் இதுதான்.. 'ரூ.1000 வருமானம் எழுத்துப்பிழை'.. மீண்டும் வேட்பு மனு தாக்கல்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூரில் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்று வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம் பெரும் விவாதத்தை எழுப்பியது. இதையடுத்து ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்று வேட்புமனுவில் இருந்தது எழுத்து பிழை என்றும் மீண்டும் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறினர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக, மநீம,அமமுக, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

நாம் தமிழர் கட்சி
அதிமுக, திமுக, மநீம,அமமுக, ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சீமான் வேட்பு மனு
சீமான், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில், தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும் கூறியிருந்தார். தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் வேட்பு மனுவில் கூறியிருந்தார்.

1000 வருமானம்
தனக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என சீமான் வேட்புமனு உறுதிமொழி பத்திரத்தில் கூறியிருந்தார். இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

2வது முறை வேட்பு மனு
என்னது ஆண்டுக்கு 1000 ரூபாய் தான் வருமானமா,.. நம்பவே முடியவில்லை என்று பலரும் கிண்டல் செய்தனர். சிலர் சீமானை விமர்சித்து மீம்ஸ் போட்டிருந்தனர். இதுபற்றி அறிந்த அக்கட்சியினர், சீமானின் ஆண்டு வருமான கணக்கு தவறுதலாக இடம்பெற்றதால், அவர் 2வது முறையாக மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிவித்துள்ளனர்.
Recommended Video

வேட்பு மனு
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, சீமானின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். ஆனால், ஆயிரம் ரூபாய் என தவறுதலாக டைப் செய்யப்பட்டுள்ளது. அதை சரி செய்து மீண்டும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். இது ஒரு எழுத்து பிழை என்று விளக்கம் அளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications