சீமானுடன் கூட்டணி வைத்தால்.. விஜய்க்குத்தான் சிக்கல்! ஏன் தெரியுமா? போட்டு உடைத்த முக்கிய புள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயை திமுக ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. விஜய் திமுகவிற்கு வாழ்த்து சொல்லவில்லை. திமுகவை மட்டுமே அவர் தவிர்க்கிறார் என்றால் திமுகவை அவர் எதிரியாக பார்க்கிறார். ஆனால் விஜயை பற்றியும் திமுக பேசவில்லை. விஜயை திமுக ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. என்று மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை விட திமுக கூட்டணியை உடைப்பதே விஜயின் முக்கிய திட்டம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.

vijay Tamilaga vetri kazhagam

முக்கியமாக விஜய் + சீமான் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.இவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டணி வைத்து திமுகவை எதிர்க்கலாம் என்று சிலர் கருத்துக்களை வைக்கின்றனர். விஜய் - சீமான் கூட்டணி பற்றி மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: ஒன்இந்தியாவிற்கும் அவர் அளித்த பேட்டியில், திமுகதான் ஆளும் கட்சி அதனால் அதை எல்லோரும் எதிர்க்கட்சியாக பார்ப்பது வழக்கம்தான். திமுக மாநில ஆளும் கட்சி என்பதால் விஜய் அவர்களை மேம்போக்காக எதிர்க்கிறார். ஆனால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை எதிர்க்கவில்லை. விஜய் போதைப்பொருளை வேண்டாம் என்கிறார். ஆனால் லியோவில் அவர் நடித்த விதம் அதற்கு எதிராக இருந்தது. கோட் படத்திலும் பாடல் வரிகள் அப்படித்தான் இருக்கிறது.

தேசிய அளவில் பிரச்சனையாக இருக்கும் நீட்டை பற்றி விஜய் பேசவில்லை. மத்திய அரசை விஜய் எதிர்க்காமல் இருக்கிறார். விஜய் நல்ல தலைவர் என்றால் அந்த இலக்கணத்தில் இருக்க வேண்டும். வேறு யாரும் நல்ல தலைவர் இல்லை என்றால் உங்களின் கொள்கை என்ன? நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டது.. இப்போது உங்கள் கொள்கை என்ன என்று சொல்லுங்கள். நீங்கள் நல்ல தலைவர் என்றால் கொள்கை என்ன என்று சொல்ல முடியும்.

விஜய் நேரடியாக கட்சி ஆரம்பித்துள்ளார். அவர் இதற்கு முன் எந்த விவகாரத்திலும் கருத்து சொல்லவில்லை. எம்ஜிஆர் அப்படி இல்லை. அவர் முழு அரசியலுக்கு வரும் முன் திராவிட கொள்கைகளை பேசினார். பெரியார், அம்பேத்காரை படிங்க என்று விஜய் சொல்கிறார். ஆனால் அவைகளை முதலில் விஜய் படித்துள்ளாரா என்று தெரியவில்லை. சீமான் விஜயுடன் கூட்டணி வைக்கிறார் என்றால் எதன் அடிப்படையில் வைப்பார்.

எந்த கொள்கைக்கு என்று சீமான் விஜயுடன் இணைவார். பெரியாரை, அம்பேத்காரை சீமான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருக்க விஜயுடன் அவர்கள் எப்படி கூட்டணி வைப்பார்கள். ஆர்ஜே பாலாஜி தொடங்கி கங்கனா ரனாவத் உட்பட பலர் அரசியல் பேசி உள்ளனர். ஏதாவது ஒரு அரசியலை பேசி உள்ளனர். விஜய் அப்படி எந்த அரசியலையும் பேசவில்லையே.

சீமானை திமுக பார்த்து பயந்தது இல்லை. விஜயை பற்றியும் திமுக பேசவில்லை. விஜயை திமுக ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. விஜய் திமுகவிற்கு வாழ்த்து சொல்லவில்லை. திமுகவை மட்டுமே அவர் தவிர்க்கிறார் என்றால் திமுகவை அவர் எதிரியாக பார்க்கிறார். ஆனால் விஜயை பற்றியும் திமுக பேசவில்லை. விஜயை திமுக ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளே ஆள வேண்டும் என்றால் கூட்டணி வைக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர் கூட்டணி வைக்கவே இல்லை. இப்போது விஜயுடன் அவர் கூட்டணி வைப்பாரா? சீமானுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்குதான் பாதிப்பு இருக்கும். சீமான் இத்தனை காலம் கூட்டணி வைக்காமல் இருந்தார். திடீரென விஜயுடன் வைத்தால் விஜயின் கொள்கை என்ன என்ற கேள்வி வரும். சீமானுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்குதான் பாதிப்பு இருக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் பேட்டி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+