இன்னொரு தோல்விக்கு தயாராக இல்லை.. கூட்டணி அரசியலுக்கான காலம் இது.. சீமானுடன் பேசிய தொடங்கிய தம்பிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பை தொகுதியில் சீமான் களமிறங்கும் முடிவை அவர் மட்டும் தனிச்சையாக எடுத்தது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை புலம்ப வைத்திருக்கிறது. நாதகவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கட்சியினருக்கு இல்லை என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் நாதக போட்டியிட்ட 234 தொகுதிகளில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 8.2% வாக்குகளை வைத்திருந்த நாதகவின் வாக்குகள், 4%ஆக குறைந்தது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதகவின் வாக்கு சதவிகிதம் 2.5%ஆக குறைந்தது. தற்போது அம்பை இடைத்தேர்தலில் சீமான் நேரடியாக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Seeman NTK By Election

சீமான் போட்டியிடுவதால், முதல் நிலை நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் இருந்தாலும், நாதக ஆதரவாளர்கள் மத்தியில் அச்சமே அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் பொது வேட்பாளராக சீமான் களமிறங்கவில்லை என்றால், மீண்டும் தோற்பது கிட்டத்தட்ட உறுதி. சொந்த மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் கூட சீமான் டெபாசிட் வாங்கவில்லை.

அம்பை தொகுதியில் அவருக்கு சொந்த ஊரும் கிடையாது.. செல்வாக்கும் கிடையாது.. கட்டமைப்பும் கிடையாது என்று நாதகவினர் புலம்ப தொடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் நாதகவின் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், தேர்தலில் போட்டியிடுவது சரியா என்றும் பேசுகின்றனர். சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின், சீமான் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்று நிர்வாகிகள் கூறி இருக்கின்றனர்.

அதேபோல் தொகுதி வாரியாக ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சீமான் இதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. அதேபோல் நாதக இன்னொரு தோல்விக்கு தயாராக இல்லை.. அதனால் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டு கூட்டணி அரசியலுக்கு தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

ஆனால் கட்சியை மறுசீரமைப்பு கூட செய்யாமல், நேரடியாக அம்பை தொகுதியில் களமிறங்கும் முடிவை சீமான் எடுத்திருக்கிறார். இந்த இடைத்தேர்தலில் சீமான் தோல்வி அடைந்தால், நாதக நிர்வாகிகள் மிகப்பெரிய அளவில் சிதறத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே நாதக நிர்வாகிகளை தவெக குறி வைத்திருக்கும் சூழலில், சீமானால் இசக்கி சுப்பையாவை வீழ்த்த முடியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+