இரு கைகளால் கிச்சு கிச்சு மூட்டிய சீமான்! குபீரென சிரித்த அதிமுக ஜெயகுமார்! என்னதான் பேசுனாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இத்தனை நெருக்கமாக பழகுவாரா என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அதாவது சீமான், ஜெயகுமாருக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார், அதற்கு அவரும் குழந்தை போல் சிரிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Jayakumar Seeman

அரசியலில் எப்போதும் நாகரீகம் என்ற ஒன்று உண்டு. என்னதான் கட்சிகள் வேறு, கொள்கைகள் வேறு என்றாலும் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் கைகளை குலுக்கி, நலம் விசாரித்துக் கொள்வார்கள்.

அதிலும் ஜெயகுமார் எல்லாம் செம அரட்டை அடிப்பார். இதை நாம் எத்தனையோ தருணங்களில் பார்த்திருக்கிறோம். தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது.

அப்போது திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், அதிமுக சார்பில் ஜெயகுமாரும் இன்பதுரையும் பங்கேற்றனர். ஜெயகுமார் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையர் பேசுவதற்குள், ஜெயகுமார், ஆர்.எஸ்.பாரதியிடம், "டை அடிக்கிறத இன்னும் விடல போல இருக்கு" என்று ஜாலியாக கேட்டார்.

அதற்கு ஆர் எஸ் பாரதியும், "டை அடிக்காம வேற என்ன பண்றது" என்று ஜாலியாக பதிலளித்தார். மேலும் அவர், "டை அடிச்சால் தான் சுறுசுறுப்பா தெரியுது.. இல்லைனா ஏதோ சோர்வா இருக்கற மாதிரி இருக்கு" என்று சிரித்துக் கொண்டே விளக்கினார்.

அதற்கு ஜெயக்குமார், "அடடே.. டை அடித்தால் தான் பிரிஸ்க் இருக்கு சொல்றீங்க" என சொன்னவர்.. அப்படியே திரும்பி, "ஏம்பா டை அடிச்சா தான் பிரிஸ்கா தெரியுதாமே" என்று சொன்னார். அதற்கு ஆர் எஸ் பாரதி ஏதோ ஒரு வாரம் ஆச்சு என்பது போல சொன்னார். உடனே ஜெயக்குமார், "டை அடித்தவரை தேடி கண்டுபிடித்து ஒரு விருது கொடுத்து விடுங்கள்" என்றார்.

உடனே ஆர் எஸ் பாரதி, ஆமா.. நீங்க தான ஏதோ மீட்டிங்கில் சொன்னீர்கள்" என்று சொல்ல.. ஜெயக்குமார் அட நீங்க வேறு ஏன் என்பது போல ரியாக்ட் செய்தார். இருவரும் இப்படி மாறி மாறி ஜாலியாக பேசுவதை நடுவே இருந்த இன்பதுரை கேட்டுச் சிரித்துக் கொண்டு இருந்தார்.

இப்படியாக இவர்களுக்குள் இருந்த உரையாடல் சிரிப்பை வரவழைத்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் சென்னை வந்திருந்தார். அப்போது அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் அவர் அழைத்திருந்தார்.

அந்த வகையில் ஜெயகுமார், இன்பதுரை, மார்க்சிஸ்ட் கட்சியின் பெ.சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். ஒரு இடத்தில் இவர்கள் மீட் செய்தனர். அப்போது சீமான், ஜெயக்குமார், இன்பதுரையின் கைகளை பிடித்துக் குலுக்கியபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென ஜெயக்குமாரின் இடுப்பில் இரு கைகளையும் வைத்து கிச்சு கிச்சு மூட்டிவிட ஜெயகுமார் மேலே பார்த்தபடி குழந்தை போல் சிரித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லாருமே சிரித்து விட்டனர். முன்னதாக அதிமுகவை சீமான் விமர்சித்த போது கோபப்பட்ட ஜெயகுமார், சீமானுக்கு வாய்க் கொழுப்பு, சனியின் மொத்த உருவம், எங்ககிட்ட மோதாதீங்க என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் நேரில் இருவரும் சந்தித்து கொண்ட போது அந்த சண்டைகள் காணாமல் போய்விட்டது போல் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+