அரசியல் களம் மாறுது.. உச்சமெடுக்கும் சீமான் vs விஜய் மோதல்.. தவெகவிற்கு யோசித்துப்பார்க்காத தலைவலி
சென்னை: கடந்த சில நாட்களாகவே விஜய் - சீமான் இடையிலான மோதல் உச்சம் அடைந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தங்கள் கட்சியின் ஒரே கொள்கை ரீதியான எதிரி பாஜகதான் என்றும், அரசியல் ரீதியான எதிரி திமுகதான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், டீலிங் போட்டு கூட்டணி அமைக்கும் கட்சி தங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கிள் விஜய் - ஸ்டாலின் விமர்சனம்
தங்கள் கட்சி உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜகவுடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை என விஜய் சுட்டிக் காட்டினார். தவெக முன்னெடுக்கும் அரசியல் உண்மை, உணர்வுபூர்வம், மற்றும் நல்ல அரசியல் மட்டுமே என்றும், நல்லது மட்டுமே செய்யும் அரசியல் என்றும் அவர் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்றும், வேறு போட்டி இருக்காது என்றும் விஜய் சவால் விட்டார். திமுக கூட்டணி அமைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார். எம்ஜிஆர் இருக்கும் வரை யாராலும் முதல்வராக ஆக முடியவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகவும், ஒரு ரெய்டு வந்ததும் உடனடியாக டெல்லிக்குச் சென்று ரகசியச் சந்திப்புகளை நடத்துவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங் அங்கிள்" என விமர்சித்தார். "மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சீமான் விஜய் அட்டாக்
இந்த நிலையில்தான் விஜயை சீமான் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். அதில், மதுரை ஆணையூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல வில்லில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணத்தை நடத்து வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள்.. அதை வைத்து எடை போடாதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதறு கிடையாது. பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு திருச்சியில் வைக்கிறேன். அதை பாருங்கள் மாநாட்டில் எவ்வாறு ஒரு தலைவன் உரை நிகழ்த்துவேன் என்று அதை பாருங்கள் மாநாடு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். மாநாடு எப்படி இருக்கும் என்று புரியும்.
விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல் சுவாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள் தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள். அணில் ஜங்கிள் ஜங்கிள் என்று அழைக்கப்பட வேண்டும். அங்கிள் என்று ஏன் கூப்பிடுகிறது. அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார் என விஜய் மாநாட்டில் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
விஜய் - சீமான் மோதல் உச்சம்
கடந்த சில நாட்களாகவே விஜய் - சீமான் இடையிலான மோதல் உச்சம் அடைந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே நாம் தமிழருடன் நெருக்கமாக இருக்கும் சாட்டை துரைமுருகன் விஜயை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தியும் கடுமையாக விமர்சனம் செய்து பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் இப்போது சீமானும் நேரடியாக தாக்க தொடங்கி உள்ளார். தமிழக அரசியல் களம் திமுக vs தமிழக வெற்றிக் கழகம் என்று மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களம் நாம் தமிழர் vs தமிழக வெற்றிக் கழகம் மாறி உள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!












Click it and Unblock the Notifications