'மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்'.. செய்தியாளர்களிடம் கொந்தளித்த சீமான்!
சென்னை: சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மண்டையை உடைத்து விடுவேண்டா ராஸ்கல்' என செய்தியாளர் ஒருவரை ஆவேசத்தில் பேசியுள்ளார்.
Recommended Video
சென்னையில் இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளரை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிவாரி கணக்கெடுப்பு
குடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு என்பது கொண்டுவரப்பட்டது. சமூக நீதி என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், எது உண்மையான சமூக நீதி... சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான நீதி வழங்குவதே சரியான சமூக நீதியாக இருக்கும். சமூக நீதியை பேசிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் ஏன் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க வில்லை. ஆனால் சமூக நீதி பற்றி பேசாத பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார்.

சமூக நீதி பேசுறீங்க
ஒன்று நீங்கள் குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள். இல்லையென்றால் இதுபற்றி நீங்கள் பேசாதீர்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. சமூக நீதி பேசுறீங்க, ஜனநாயகம் பேசுறீங்க.. எல்லா வீட்டிலும் கொடி ஏத்தனும்னு சொல்றீங்க... தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் ஊராட்சி மன்ற தலைவராக வந்த போது அவரது பெயரை கூட போர்டில் எழுது அனுமதிக்க மாட்டுறீங்க.. இது எந்த மாதிரியான சமூக நீதி...

நிருபர்கள் கேள்வி
இவ்வாறு இடஒதுக்கீடு குறித்து பேசிக்கொண்டிருந்த சீமானிடம் நிருபர் ஒருவர், 'பெரியார் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கூடாது என்று கூறியிருக்கிறாரே அதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த சீமான், இப்போதும் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா? இல்லையா? என நிருபர்களிடம் பதில் கூறுமாறு பேசினார். தொடர்ந்து பேசிய சீமான் நிருபரை நோக்கி இடஒதுக்கீடை நீங்கள் ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு நிருபர் ஒருவர், ஜமீன்தாரர்கள், மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆகியோர்களுக்கு பிசி எம்பிசியில் இடஒதுக்கீடு கொடுக்கும் நிலையில் முற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை என கேட்கிறார்.

மண்டையை உடைத்து விடுவேன்
அதற்கு பதிலளித்த சீமான் நீ தான் பெரிய முன்னேறுன வெங்காயமாச்சே... நீ பிசி எம்பிசிக்கு வா.. நான் இங்கே தான் இருப்பேன்... நான் முற்படுத்தப்பட்ட வகுப்பா தான் இருப்பேன்.. என கூறி முடிப்பதற்குள் நிருபர், அத பத்தி நீங்க பேசவேயில்லைய சார் என கூறுகிறார். அதற்கு ஆவேசப்பட்ட சீமான்.. காதில் பஞ்சை வைத்து படுத்து கிடந்துவிட்டு என்னை பேசவில்லை..கீசவில்லை... என்கிறாய்.. கேட்கவில்லை என்றால் கேட்கவில்லை என்று கூறு... என்றார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த சீமான் 'மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்' என பேசினார். தொடர்ந்து கூச்சல் குழப்பம் அதிகரித்தால்.. சீமானிடம் விஜய், ரஜினி வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்து சீமான் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications