“இந்த சால்வையால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல..” தொண்டருக்கு நோஸ் கட் தந்த சீமான்
சென்னை: பொன்னாடை போட வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரின் கையை தட்டிவிட்டு "பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல" என்று சீமான் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சன் மியூசிக், விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் பிரபலமானவர் ரியோ ராஜ். இவர் ஏற்கனவே கார்த்திக் இயக்கத்தில்
'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஹரிஹரன் ராம் இயக்கத்தில் 'ஜோ' என்ற படத்தில் நடித்து உள்ளார். பாவனா த்ரிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ராகுல் கேஜி விக்னேஷ் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்தின் தொகுப்பாளராக வருண் பணியாற்றி இருக்கிறார். அருள் நந்து மற்றும் மாத்யூ அருள் நந்துவின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ஆர்யா வெளியிட்டார். இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜோ படக்குழுவினர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் சீனு ராமசாமி என திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டார்கள். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொள்ள சென்றார். காரில் இருந்து இறங்கிய அவரை அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது ஒருவர் சீமான் அருகே சென்று சால்வை அணிவிக்க முயன்றார்.
அதை ஏற்க மறுத்த சீமான் தட்டிவிட்டு நடந்து சென்றார். அப்போது அவர், "பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. இதை ஒரு பழக்கம் என்று வைத்துக்கொண்டு அலைகிறார்கள்." என்று கூறிச் சென்றார். சீமானின் இந்த செயலால் அங்கிருந்தவர்களின் முகம் வாடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் சீமானின் செயலை ஒரு தரப்பினர் நியாயப்படுத்தியும், மற்றொரு தரப்பினர் விமர்சித்தும் வருகிறார்கள்.
பொன்னாடை போர்த்துவது என்பது சுயமரியாதையின் அடையாளமாகவும், துண்டு போட அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அடிமைத்தனத்தில் இருந்து விலக்கு அளிக்கும் முறையாகவும் பார்க்கப்பட்டு வரும் நிலையில் சீமானின் இந்த செயல் தவறு என்றும் கருத்துக்கள் பகிரப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications