கூட்டணிக்காக கையேந்தும் சீமான்.. ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கினாரா? சுபவீர பாண்டியன் ‛அட்டாக்’
சென்னை: ‛‛யார் யாருடனும் கூட்டணி சேரமாட்டேன். தன்னந்தனியாக தான் நிற்பேன். இப்போது ஏன் எல்லோரிடமும் கையேந்துகிறாய்? 40 தொகுதிகளில் போட்டியிட்டாயே.. ஒரு இடத்திலாவது டெபாசிட் வாங்கினாயா?'' என திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுபவீர பாண்டியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திராவிட இயக்க தமிழர் பேரவைவையை தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருப்பவர் சுபவீர பாண்டியன். இவர் பெரியார் பற்றாளர். இவர் அடிக்கடி மேடைகளில் நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் சுபவீர பாண்டியனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்றைய நிகழ்ச்சியில் சுப வீரபாண்டியன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது: யார் யாருடனும் கூட்டணி சேரமாட்டேன். தன்னந்தனியாக தான் நிற்பேன். இப்போது ஏன் எல்லோரிடமும் கையேந்துகிறாய்? அதிமுகவின் ஓட்டு எனக்கு தான் வரும். தேமுதிக ஓட்டு எனக்கு தான் வரும் என்பார். நீ எடப்பாடியை பற்றி என்ன பேசினாய்? கருணாநிதியை மட்டும் தான் பேசியிருக்கிறாரா? எடப்பாடியை பற்றி என்ன பேசினார் என்பதை எடப்பாடிக்கே நினைவூட்ட வேண்டும். எடப்பாடி பற்றி சீமான் என்ன சொன்னார், ‛இடையில் வந்த பாடி' என்று பொருள் என்று கூறினார்.
சீமான் என்றால் என்ன பொருள் சீ + மான் என்று பிரிக்கலாமா? என்று நான் கேட்கிறேன். எடப்பாடி எனில் இடையில் வந்த பாடி என்றால் சீமான் என்றால் என்ன பொருள் என்று பிரித்து சொல். கேப்டன் என்கிறார்களே, அவர் கபடி டீமுக்கு கூட கேப்டனாக இல்லை என்று சொன்னாயா? இல்லையா? இப்போது அந்த அம்மையாரை (பிரேமலதா விஜயகாந்த்) பார்த்து நான் கேப்டனுக்காக ஓட்டு கேட்டுள்ளேன். நீங்கள் எனக்காக வாருங்கள் என அழைக்கிறார்.
எதற்காக நீ தான் கூட்டணி சேர்வது இல்லையே.. தம்பி விஜய் முடிவு செய்யப்பட்டும். காத்திருக்கிறேன் என்கிறார். ஏன்? நீ தான் யாருடனும் கூட்டணி சேரமாட்டாயே.. எதற்காக காத்திருக்கிறாய் என்றால் அப்படியாவது டெபாசிட் வருமா? என்று பார்க்கிறார். 40 தொகுதிகளில் நிற்பதும் பெரிது இல்லை. 40 தொகுதிகளில் ஒன்றிலாவது உன்னால் (சீமான்) டெபாசிட் வாங்க முடியுமா?
எங்கள் தலைவருக்கும் (ஸ்டாலின்), உனக்குமான வேறுபாட்டை சொல்லட்டுமா? இதுவரைக்கும் நீ (சீமான்) தேர்தலில் வென்றதே இல்லை. அவர் (ஸ்டாலின்) இதுவரை தேர்தலில் தோற்றதே இல்லை’’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications