அதிமுகவை வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்த சீமான்! கூடவே வருகிறார் விஜய்? எடப்பாடி "முக்கோண" வியூகம்?
சென்னை: அதிமுகவை வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்து இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதோடு இல்லாமல் இந்த கூட்டணியில் விரைவில் நடிகர் விஜய் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான ஆலோசனைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 40லும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது. அதிலும் முதல்முறையாக ஒரு தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பாமக, நாம் தமிழர், திமுக போட்டியிடுகிறது. இங்கே மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.
2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.
நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை.
அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவு எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2026ல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அப்போது அரசியல் எப்படி மாறும் என்று பார்க்கலாம். இது சாதாரண இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என்று சீமான் வெளிப்படையாக கேட்டுள்ளார்
சீமான் உடன் வரும் விஜய்: நடிகர் விஜயிடம் கூட்டணி தொடர்பாக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
விஜயை தங்கள் பக்கம் கொண்டு வர அதிமுக திட்டமிடுவதற்கு பின் சில காரணங்கள் உள்ளன. பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது. கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போதும் மொத்தமாக கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வாக்குகள் வந்தன.
இப்படிப்பட்ட நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகபட்சம் 11-12 கொடுத்தால் கூட.. அவர்கள் அதிமுக உடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் விஜயுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
ரகசிய பேச்சு; நடிகர் விஜயிடம் கூட்டணி தொடர்பாக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
அதிமுகவில் விஜய்க்கு கொஞ்சம் நெருக்கமாக, அன்பாக இருக்கும் மாஜிக்கள் மூலம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்கிறார்கள். 2026க்குள் இது கூட்டணியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications