நீங்கல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா? சீமானின் நாதக தம்பிகளை வெளுத்து வாங்கிய நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கும் நிலையில் அந்த வழக்கில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் தன்னை பாலியல் தொழிலாளி என சீமானின் நாம் தமிழர் கட்சியினர் பரப்பி வருவதாகவும் அவர்களுக்கு அக்கா தங்கச்சி எல்லாம் கிடையாதா என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அந்த நடிகை.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

Seeman NTK politics

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சீமானின் ஆதரவாளர்கள் தன்னை பாலியல் தொழிலாளி என விமர்சித்து வருவதாகவும் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளர் புகார் அளித்த அந்த நடிகை.

இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டு இருக்கும் அவர்," சீமானை பாலியல் குற்றவாளி என்று சொன்னால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன் என அவரது கட்சியினர் சொல்லுகிறார்கள். சீமானை பாலியல் குற்றவாளி என்று சொன்னால் வலிக்கும் போது.. என்னை பாலியல் தொழிலாளி என்று சொன்னால் வலிக்காதா.. சீமானுடன் பல தொடப்பக்கட்டைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு சேனலாக உட்கார்ந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். எனக்கு எத்தனை திருமணம் நடைபெற்றது என்று சீமானுக்கு வக்காலத்து வாங்கி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சியே இல்லையா? ஒரு தமிழ் பொண்ணு நான் வாழ்க்கையை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.. இவ்வளவுதானா நீங்கள். இது தானா ஒரு பெண்ணை காப்பாற்றுவது. சீமான் கூட இருக்கும் எல்லோருக்கும் ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. என்னுடைய போர் இன்னும் முடியவில்லை.. என்னை பற்றி அவதூறாக யார் யாரெல்லாம் பேசினார்களோ அவர்கள் மீது நான் மானநஷ்ட வழக்கு போட போகிறேன். என்னை பற்றி பேசிய நீங்கள் எல்லாம் தயாராக இருங்கள். ஒரு பெரிய தொகையை நீங்கள் எனக்கு நஷ்ட ஈடாக கொடுத்தே ஆக வேண்டும்.

பொம்பள புள்ள வாழ்க்கை என்றால் உங்களுக்கு அவ்வளவு விளையாட்டா போச்சா? சீமான் ஒரு ஆம்பளையா.. விசாரணைக்கு கூப்பிட்டால் மொத்த கட்சிக்காரர்களையும் வைத்துக்கொண்டு பிலிம் காட்டும் சீமான் எல்லாம் ஒரு தலைவனா? இலங்கையில் போர் நடந்த போது ஒரு மாதம் மதுரையில் என்னுடன் சீமான் என்ன செய்தார்? 2023 முதல் விஜயலட்சுமிக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் சீமான் எதற்கு கொடுத்தார் என கேட்க உங்களுக்கு துப்பில்லையா? ஆனால் நீங்கள் என்னை பற்றி பேசுகிறீர்கள். என்னை பற்றி பேசியதற்கு சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள். சீமான் வாலாட்ட வேண்டாம்.. என்னை பாலியல் தொழிலாளி என்று சீமான் சொன்னபோது முடிவு செய்து விட்டேன். சுப்ரீம் கோர்ட்டில் சீமான் எப்படி திணறப்போகிறார் என்று பாருங்கள்" என அந்த வீடியோவில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+